This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
சக்தியும் சத்யாவும் ஜீப்பில் இருந்து இறங்கிக் கொண்டிருக்கும் போதே ப்ரியம்வதா அவர்கள் பக்கம் ஓடி வந்தாள்.
“வினாயக் பேசினார் சக்தி மேடம். நீங்க அவருக்கு ஹெல்ப் செய்ததை சொன்னார். ரொம்ப தேங்க்ஸ் மேடம்”
சக்தி உடனடியாக பதில் சொல்லவில்லை. அதனால் சத்யா பதில் சொன்னாள்.
“நான் சொன்னேனே ப்ரியம்வதா. உங்களுக்கு உதவுறோம்னு சொல்லிட்டோம். கட்டாயம் செய்வோம். இப்போ எங்களுக்கு உங்க ஹெல்ப் தேவைப்படுது”
“என்ன ஹெல்ப்? சொல்லுங்க மேடம்”
“உங்க வீட்டுல எல்லோர் கிட்டேயும் நாங்க பேசனும். விசாரிக்குறோம்னு சொன்னா சரியா இருக்காது. ஃப்ரீயா பேசுவாங்களான்னும் தெரியலை.”
“நீங்க விசாரணைன்னு சொல்லாம பேசுங்க மேடம். உங்களை அம்மாக்கு நல்லா தெரியும். அவங்க எந்த தயக்கமும் இல்லாம உங்க கிட்ட பேசுவாங்க. ராகுல், ஐஸ்வர்யா, ஸ்ரீனிவாஸ் எல்லோர் கிட்டேயும் நீங்க எனக்கும் வினாயக்குக்கும் ஃபிரென்ட்ஸ்ன்னு சொல்லி அறிமுகப் படுத்துறேன்”
“அவங்க மட்டும் இல்லை ப்ரியம்வதா. உங்க வீட்டுல வேலை செய்றவங்க கிட்டேயும் நான் பேசனும்” – சக்தி.
“வீட்டுல வேலைக்குன்னு இரண்டுப் பேர் இருக்காங்க. எஸ்டேட்ல வேலை செய்றவங்க நிறைய பேர் சக்தி மேடம். அவங்க எல்லோரையும் பத்தி எனக்கே முழு விபரம் தெரியாது. மேனேஜர் கிட்ட கேட்டா அவர் விபரம் சொல்வாரு.”
“முதல்ல வீட்டுல வேலை செய்ற இரண்டுப் பேர் கிட்ட நாங்க பேசுறோம் ப்ரியம்வதா. அதுக்கு அப்புறமா எங்களை அந்த மேனேஜருக்கு இன்ட்ரோ செய்து வைங்க. நாங்க அங்கே இருந்து பார்த்துக்குறோம்”
“சரி மேடம்”
ப்ரியம்வதா இருவரையும் வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.
சக்தி பக்கத்தில் உரசுவதுப் போல வந்த சத்யா, ரகசியக் குரலில் அவளிடம் பேசினாள்.
“உனக்கு டீம் வொர்க்ன்னா என்னன்னு தெரியலை சக்தி. இந்த கேஸ் முடிஞ்ச உடனே தனியா உனக்கு கிளாஸ் எடுக்குறேன்”
“இப்போ எதுக்கு சம்மந்தமே இல்லாம இதை சொல்ற?”
“இரண்டு பேர் சேர்ந்து வேலை செய்யும் போது நான்-னு சொல்லக் கூடாது! நாம்-ன்னு சேர்த்து சொல்லனும்!”
Boss subordinate nalla samalikuranga
Thank you....