அருணாச்சலம் என் மருமவ என்றதும், கமலா ஒன்றும் விழுங்கா பார்வையை அவர் மேல் செலுத்திவிட்டு, வீட்டின் உள்ளே செல்கையில் மங்கலகரமான முகத்துடன் சமையலறை சென்றாள்.
கமலத்திற்கு இப்போதுதான் அனைத்தும் விளங்கியது.
ஓ..... இந்த புள்ள தான் எல்லா வேலையும் செஞ்சதா, பரவாயில்லயே......என்று மனதில் நினைத்துக் கொண்டே சமையலறையை எட்டிப் பார்க்க......
தர்ஷினி வெங்காயம் தக்காளியை வெட்டி கொண்டிருந்தாள்.
அப்பொழுது கதிர் அறையை விட்டு வெளியே வந்தான். வந்தவன் நேராக சமையலறை உள்ளே சென்று,
தர்ஷீ..... எத்தனை பாக்கெட் மாவு வாங்கிட்டு வரனும்.
ம்ம்......என்று யோசித்தவள். வீட்ல மொத்தம் எத்தனை பேர் கதிர்.
ம்ம்....அவன் சிறு குழந்தை போல கூற ஆரம்பித்தான். நானு, நீங்க, அம்மா, அப்பா, தம்பி, சின்ன அண்ணா, சின்ன அண்ணி, தங்கச்சி, தங்கச்சி பொண்ணு, மாப்புள்ள எல்லாரும் இப்ப வந்துருவாங்க. அக்காவும், அக்கா வீட்டுக்காரும் பகல் ஃபுல் இங்கதா இருப்பாங்க அவங்களுக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு. நைட் தூங்க மட்டும் வீட்டுக்கு போவாங்க. அப்புறம் பெரியண்ணா அண்ணிக்கு டெலிவரி அதனால அத்தை அவுங்கள பார்த்துப்பாங்க. ஆனா அவுங்க பொண்ணு இரண்டு பேர் இங்கதா இருக்காங்க.... மொத்தமா பார்த்தா பதினாறு பேரு தான். கரெக்டா மட்டும் செஞ்சிடாதிங்க சொந்த காரவுங்க அடிக்கடி வந்துருவாங்க.
அவள் கன்னத்தில் கை வைத்து ஒரு ஆச்சரிய பார்வையோடு நின்றிருந்தாள்.
அவள் செய்கை பார்த்தவன் என்னாச்சுங்க என்று கேட்க.....
இல்ல உண்மையாவே உங்களோட இந்த சம்பளத்தில் தான் இந்த குடும்பம் ஓடுதா.....
ஆமாங்க....
எப்படிங்க எங்க வீட்ல நானும் அம்மாவும் மட்டும் தான். எங்க ரெண்டு பேரு செலவே மாசம் 20,000 வரும்.
ஆனா எப்புடி இங்க எத்தனை பேரு இவ்ளோ பேருக்கு சாப்பாடு செஞ்சாவே ரொம்ப ஆகுமே.....
அவன் சிறு சிரிப்புடன் அது அந்தந்த வீட்டில் இருக்கிற, நிலைமையைப் பொருத்து தர்ஷீ.
எப்புடி????என்று அவள் யோசனை படிந்த முகத்துடன் கேட்க....
ம்ம்.... சொல்றேங்க..... இன்னிக்கு நாம லீவுதான. ரூம்ல போய் இதை பத்தி பேசலாமா. குழந்தைங்க எந்திரிக்கிறது முன்னாடி நான் மாவு வாங்கிட்டு வந்துடட்டுங்களா.....இல்லனா
Mr n mrs kumbakarnare idhu ungalukke nyayama 😈😈 😴😴😴 cool and interesting update ma'am 👏👏👏👏👏👏👏 kadhir n dharsh eppadi samalipanganu parkalam.
Thank you.
Totally agree!
குடும்பத்தில் நடக்கும் அன்றாட சில்லறை விஷயங்களை படிக்கும்போது, மனம் நிரம்பி வழிந்தது! தனுவின் கைவண்ணத்தில்!