காலை பதினொன்றரை மணி வாக்கில், தனது டி.வி.எஸ்.50ல் வந்திறங்கினார் சுதாகர்ஜி. வரும் போதே, “என்ன மார்கெட்டிங் புலி...ஏதாச்சும் ஐடியா யோசிச்சியா?” கேட்டுக் கொண்டே வந்தார்.
“ம்...யோசிச்சு வெச்சிருக்கேன்!...ஆனா...எல்லாம் தப்பாவே இருக்கு...சாமி விஷயத்துக்கு அது செரிப்பட்டு வருமா?ன்னு பயமாயிருக்கு” என்றான் ரவீந்தர்.
இருவரும் வீட்டிற்குள் வந்து நாற்காலியில் அமர்ந்த்தும்,
“என்ன?ன்னு சொல்லு...சரிப்படுமா?...இல்லையா?ன்னு நான் சொல்றேன்” என்றார் சுதாகர்ஜி.
“வந்து....ஏதாவது தகிடுதத்தம் பண்ணி...இந்தக் கோயிலுக்கும்...இந்த உப்பாயம்மனுக்கும் ஒரு மகிமை இருக்கு...ஒரு சக்தி...இருக்கு!ன்னு ப்ரூஃப் பண்ணணும்!...அப்புறம் மீடியாக்களை இங்க வரவழைச்சு...அதை செய்தியாக்கி வெளியிட வைக்கணும்!...அதே மாதிரி...சமூக வலைதளங்கள்ல பயங்கரமா பரவ விடணும்!...”கைகளில் ஆக்ஷன் காட்டியவாறே ரவீந்தர் சொல்ல,
“அப்படி செஞ்சா?” தலையைச் சாய்த்துக் கொண்டு கேட்டார் சுதாகர்ஜி.
“சென்னையிலிருக்கும் ஒருத்தன் பொள்ளாச்சில இருக்கற உப்பாயம்மன் கோயில் பற்றிப் பேசுவான்!...மதுரையில் ஒருத்தன் பேசுவான்...இன்னும் திருச்சி...திருநெல்வேலி...”ன்னு எல்லா ஊரிலும் பேசுவாங்க!...அந்தச் சமயத்துல...யாரோ ஒருத்தர் “எனக்கு குடும்பத்துல இந்தப் பிரச்சினை இருந்தது....உப்பாயம்மன் கோயிலுக்குப் போயிட்டு வந்தேன்..அது நிவர்த்தி ஆயிடுச்சு”ன்னு சமூக வலை தளங்கள்ல ஸ்டேட்டஸ் போடணும்!...அதே மாதிரி இரு பத்துப் பேர் போட்டுட்டா...இங்க கூட்டம் தன்னாலே வர ஆரம்பிச்சிடும்!...வெளியூர் மக்கள் வர்றதைப் பார்த்து உள்ளூர் மக்களும் கோவிலுக்கு வர ஆரம்பிச்சிடுவாங்க!...” ரவீந்தர் சொல்லிக் கொண்டே போனான்.
“சரிப்பா...இதுல வருமானத்துக்கு ஒண்ணும் இல்லையே...செலவுகள் தான் ஆகும் போலிருக்கே?” சுதாகர்ஜி வருத்தத்தோடு சொன்னார்.
“இங்க பாருங்க ஜி...இன்னிக்கு நாட்டுல அதிகமா ஆன்மீகத் தேடலுக்குப் போறவங்க...கறுப்புப் பண முதலைகளும், நேர் வழியில் பணம் சம்பாதிக்காத ஆட்களும்தான்!...அவங்க தங்களோட கறுப்புப் பணத்தை இங்க கொண்டு வந்து தள்ளுவாங்க!...தள்ள வைக்கணும்” விழிகளை விரித்துக் கொண்டு சொன்னான் ரவீந்தர்.
சுதாகர்ஜி யோசனையுடன் ரவீந்தர் முகத்தையே பார்க்க,
“த பாருங்க ஜி....இது வியாபார காலம்....எல்லாத்துறையிலும் இன்னிக்கு மார்க்கெட்டிங்தான் முக்கிய இடம் வகிக்குது!....ஆஸ்பத்திரிக்காரன் ஆடித் தள்ளுபடி மாதிரி ஆபரேஷன்களுக்கு
Sundar ji ivalo guilty feelings vendam god oda hidden power pulli market pana poraram
Thank you.