அந்த பெரும் சத்தத்தை கேட்டு வெளியே சென்றிருந்த செவிலியர் உள்ளே ஓடி வந்தார்.
உள்ளே வந்தவுடன் அவர் கண்ட காட்சி அனிதா தன் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்த கையை வலிப்பு வந்தவள் போல் ஆட்ட...... கதிர் என்ன செய்வதென்று தெரியாமல் டாக்டர் .......டாக்டர்...... என்று கத்திக்கொண்டிருந்தான்.
சார் என்ன ஆச்சு என்று ட்ரிப்ஸை சரி செய்து கொண்டே அந்த செவிலியர் கேட்க.....
அவன் அதற்கும் பதில் ஏதும் சொல்லாமல் டாக்டர்........ டாக்டர் என்று கத்தினான்.
டாக்டரும் வந்துவிட இவனை வெளியே இருக்குமாறு சொல்லிவிட்டு, அனிதாவை பரிசோதித்தார் டாக்டர்.
கதிர் வெளியே வந்ததும் தேன்மொழி அவனிடம் ஓடி வந்து,
என்னாச்சு சார்.....நீங்க டாக்டர் ஏன் கூப்புட்டிங்க என்று அவள் பதட்டத்துடன் கேட்க....
அவளை குற்ற உணர்ச்சியோடு பார்த்தவன். ஏதும் கூறாமல் அமைதியாக சென்று நின்று கொண்டான்.
இப்பொழுது தேன்மொழிக்கு கதிரைப் பார்த்து கோபமாக வந்தது. என்ன நடந்துச்சுன்னு சொன்னாதானே தெரியும். இப்படி உம்மனாமூஞ்சி மாதிரி இருந்தா என்ன தான் பண்ண முடியும் என்று கோபமுடன் அவனைப் பார்த்தாள்.
ஆனால் அவன் முகம் முழுவதும் வேதனை அப்பியிருந்ததை பார்த்து அமைதியாக ஒரு ஓரமாக திரும்பவும் நின்று கொண்டாள்.
அசோக்கும்,கார்த்திக்கும் அனிதாவின் வீட்டிற்கு தகவல் தெரிவித்துவிட்டு அப்பொழுது தான் ஐ சீ யூ வார்டை அடைந்தனர்.
இவர்களைக் கண்டதும் தேன்மொழி ஓடிவந்து, எங்க அண்ணா போனீங்க....
ஏம்மா என்னாச்சு..... டாக்டர் வந்து ஏதாவது சொன்னாரா....
ஆமா அண்ணா டாக்டர் வந்து சொன்னாங்க என்று நடந்தது அனைத்தையும் அசோக்கிடம் கூறினாள்.
இதனை கேட்டவுடன் அசோக்கும் கார்த்திக்கும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
நான் என்ன கேட்டாலும் இவர் ஃப்ரண்ட் வாயவே திறக்க மாற்றாரு ணா என்ன நடந்துச்சு நீங்களாவது சொல்றீங்களா.....
உண்மையாவே என்ன நடந்துச்சுன்னு எங்களுக்கு தெரியலம்மா.....கதிர் இப்படி பேசாம இருந்தா அனிதா தான் என்ன நடந்துச்சுன்னு சொல்லணும் எந்திரிச்சு வந்து,
ஐயோ எனக்கு ஒரே டென்ஷனா இருக்கு ஏன் எல்லாரும் இப்படி இருக்காங்க.....என்று அவள் கோபமாக பேசிவிட்டு தன்னிடத்தில் சென்று நின்று கொண்டாள்.
Mozhi enna pa morachute irukaga😡😡😡😡😜😜karthi ena panna poraka aprm swetha pathi kelvikuriya iruku🤔🤔🤔eagerly waiting for your next episode