“என்னால இதுக்கு மேல முடியலை ஆனந்த். உனக்கு ஹெல்ப் செய்யனும்னு நானும் முயற்சி செய்றேன். நீ இப்படி ஒவ்வொரு தடவையும்...”
போனின் மறுப்பக்கம் பேசிக் கொண்டே இருந்த பிறைநிலா திடீரென்று சடன் ப்ரேக் போட்டவளைப் போல பேச்சை பாதியில் நிறுத்தினாள். அவள் தன் கோபத்தை கட்டுப்படுத்த முயல்கிறாள் என்பதை ஆனந்தால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
“சாரி அக்கா. நான் கேர்ஃபுல்லா இருந்திருக்கனும். ஜெய்ப்பூர்க்கு தான் ட்ராவல் ஸ்டார்ட் செய்தேன். அகிலாவை பார்க்கவே ஒரு கட்டஸீக்காக அவங்க ரிலேட்டிவ் மீட் செய்தேன். அதனால் இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை. வேணும்னே எங்களோட இருந்த தர்ட் பெர்சனை கட் செய்துட்டு எங்க இரண்டுப் பேர் பிக்சர் போட்டு இருக்காங்க.”
மிக பொறுமையாக அமைதியான குரலில் பேசினான் ஆனந்த்.
அவன் பேசிய விதம் பிறைநிலாவை சமாதானப் படுத்தி இருக்க வேண்டும். அவளின் குரலும் இப்போது அமைதியாக ஒலித்தது.
“இட்ஸ் ஓகே ஆனந்த்! இங்கே, இளம்தேவி இன்னும் கிளம்பலை. அதித்தி எல்லோரும் கூட இருக்காங்க. நியூஸ் பார்த்துட்டு என்ன நடந்திருக்கும்னு உன்னாலேயே கெஸ் செய்ய முடியும். நான் இங்கே சமாளிக்கிறேன். நீ பார்த்துக்கோ! அறிவரசி கிட்ட அகிலாவிடம் பேச சொல்றேன். அவளும் கவனமா இருக்கனும். ப்ரெஸ்ன்னு சொல்லாம கூட அவக் கிட்ட யாராவது ஏதாவது நியூஸ் கலக்ட் செய்ய முயற்சி செய்ய வாய்ப்பு இருக்கு. நீ ஜெய்ப்பூர்ல மீட்டிங் முடிஞ்ச உடனே எனக்கு மெசேஜ் அனுப்பு.”
“செய்றேன் அக்கா. பை.”
அழைப்பை துண்டித்து விட்டு அகிலாவிடம் எதுவும் சொல்லாமல் ரென்டல் காரின் கதவை அவள் அமர திறந்து விட்டான் ஆனந்த். அகிலாவும் எதையும் கேட்காமல் ஏறி அமர்ந்தாள்.
“என்னால தான் இந்த கன்ஃப்யூஷன் ஆனந்த். நான்...” என்று பேச்சைத் தொடங்கிய அகிலாவிடம் மேலே பேசாதே என்று சொல்பவனைப் போல அவள் உதட்டில் தன் விரலை வைத்து தடுத்தான் ஆனந்த்.
“நடந்த எதுக்கும் நீ காரணம் கிடையாது அகிலா. என்னோட உன் வாழ்க்கை தொடர்ந்தால் அது எப்படி இருக்கும்ங்குறதுக்கு இது ஒரு சின்ன சாம்பிள்ன்னு வேணா சொல்லலாம். சென்னைல என்னை யாரு கவனிக்க போறாங்கன்னு கேர்லஸா இருந்துட்டேன். உனக்கு இப்படி நடந்தது ஷாக்கிங்கா இருக்கும்...”
அகிலா ஆனந்த் கையில் இருந்த அவனின் போனை வாங்கி அதன் டிஸ்ப்ளேவில் இப்போதும் இருந்த அந்த ஃப்ளாஷ் செய்தியை மீண்டும் பார்த்தாள். அப்படியே ஒரு பெரிய ஸ்மைலும்
Lovely update bindu ma'am 👏👏👏👏👏👏👏 sheela aunty mathiri Nila akilavai partha ippadi cool aga irupangala
Look forward to read the next update.
Thank you.
Mookuthi amma padathula tan plan iruko ha ha