(Reading time: 6 - 11 minutes)
Thoora theriyum megam
Thoora theriyum megam

அடுத்த முக்கால் மணி நேரத்தில் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள், டிபன் அருந்தி முடித்து விட்டுக் கிளம்பத் தயாராக,

அர்ச்சனா அக்காவிடம் வந்து, “அக்கா எல்லாரும் புறப்படறதுக்கு ரெடியாயிட்டாங்க...உனக்கு இன்னொரு தரம் நல்லா மாப்பிள்ளையைப் பார்க்கணும்னு இருந்திச்சுன்னா...வா..இங்க வந்து நின்னு பார்த்துக்கோ!...அப்பத்தான் கனவுல வருவார்!...ஆடுவார்...பாடுவார்...ம்ம்ம்...வேற என்னென்னவோ செய்வார்!” என்றாள் கண் சிமிட்டலுடன்.

“ஏய்...நீ என்கிட்ட நல்லா அடி வாங்கப் போறே?”

“நான் உன் தங்கை...என்னைய நீ அடிக்கலாம்...ஆனா இந்தப் பழக்கத்தை நாளைக்கு புருஷன் கிட்டேயும் காட்டிடாதே!...”

“இரு...இரு...உனக்கும் ஒரு நாளைக்கு கல்யாணம் நிச்சயமாகும்...அப்ப நான் பேசறேன் இந்தப் பேச்சையெல்லாம்!”என்றாள் சுலோச்சனா.

மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் எல்லோரும் சென்ற பின் வீடே வெறிச்சோடிப் போனது.

ஜமுக்காளத்தில் தரகருடன் அமர்ந்து சீரியஸாய் எதைப் பற்றியோ பேசிக் கொண்டிருந்தார் தேவநாதன்.

விஷயம் கொஞ்சம் கொஞ்சமாய் காம்பௌண்டிற்குள் பரவ, பக்கத்து விட்டு பானு நேரில் வந்து சுலோச்சனாவிடம் தன் வாழ்த்தைச் சொல்லி விட்டுச் செல்ல, அர்ச்சனா அவளிடம் சம்பூர்ணம் வந்து போனதைப் பற்றியும், அங்கு அவள் நடந்து கொண்ட விதத்தைப் பற்றியும், வயிற்றெரிச்சலோடு புலம்பித் தீர்த்தாள்.

“விடும்மா...விடும்மா!...ஆண்டவன் இருக்கான்...அவன் பார்த்துக்குவான் எல்லாத்தையும்!” என்றாள் பானு.

அவர்கள் பேசிக் கொண்டிருந்த அந்த விநாடியில் அந்த அலறல் குரல் எல்லோரையும் உறைய வைக்கும் விதத்தில் ஒலித்தது.

அர்ச்சனா அரண்டு போனாள்.

பானு பீதியில் சிலையாய் நின்றாள்.

“இது...இது...அந்த சம்பூர்ணத்தின் குரல் அல்லவா?” கேட்டபடியே பார்வதி வெளியே ஓடினாள்.

தொடரும்...

Next episode will be published on 27th Feb. This series is updated weekly on Saturdays.

Go to Thoora theriyum megam story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

4 comments

  • Sambooranam husband thaviritaara.. adhanaala dhaan avanga amadhiya indha nichayathula kalandhu kittaangala.. atleast this time this alliance should set nu.. I guess so
  • Nice episode :hatsoff: .appadaa marriage date fix panniyaachu :clap: .congratulations sulochanaa :grin: . Sampoornam ku ennachu :Q: .ethum plan panrankalo!.waiting for next episode :-) .

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.