(Reading time: 9 - 17 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 19 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

ன்ன பர்த்டே அதுவுமா கிப்ட் வேணாங்கற? முதலில் நீ அது என்னனு தொறந்து பாரு! பார்க்காமலே பரிசுலாம் வேணாம்னு சொல்லிட்டு இருக்க!

வேணாம்டா!அம்மா யார் கொடுத்தா என்ன ஏதுன்னு ரொம்ப கேள்வி கேட்பாங்க

உங்க மருமகன் கொடுத்தார்னு சொல்லு!

ஆங் சொல்றேன்! அடுத்து வீட்டை விட்டு வெளில துரத்திடுவாங்க

துரத்தினா என் வீட்டுக்கு வா!

ம் வரேன் ..ஆளைப் பாரு என்றவள், தினேஷ் கொடுத்த பரிசை தன் கல்லூரிப்பைக்குள் வைத்து விட்டு, அவள் அவனுக்காக வாங்கி வைந்திருந்தா டெய்ரி மில்க் சாக்லேட்டை எடுத்துத் தரவும், வாங்கிக் கொண்டு அவனும்  புறப்பட எத்தனித்தான்.

வெறும் இந்த கிப்ட் மட்டும் தானா என்றவள் சொல்லி முடிக்குமுன்னர், எதிர்பாராத விதமாக அவன் அவள் முகத்தைத் திருப்பி அவளின் இடது கன்னத்தில் முத்தமிட்டு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரம்யா என்று சொல்லிவிட்டு விரைந்து வெளியேறினான். ரம்யாவுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் காதலன் கொடுத்த முதல் முத்தம் இனிமையாகவும் இருந்தது.  என்னதான் இந்த ரம்யா செய்கிறாள், பஸ்ஸுக்கு நேரமாகுது  என்று நினைத்தவாறே  உள்ளே லேசாக எட்டிப் பார்த்த தேவி இந்த காட்சியைக் கண்டு அதிர்ச்சியில் ஆவென்று தன்னிச்சையாக வாயைத் திறந்த வண்ணம் நின்றிருந்தாள்.

டாம் மற்றும் ஜெர்ரி கார்டூனில் டாம்  அடி வாங்கும் போது கண்ணைச் சுற்றும்  நட்சத்திரங்கள் போல குட்டிக்குட்டி நட்சத்திரங்கள் ரம்யாவின் கண்களைச்  சுற்றிக் கொண்டிருந்தன. ரம்யா தான் ஆகாயத்தில் பறப்பது போலிருந்த  உணர்வில்  படிக்கட்டுகளில் தாவித்தாவிக் குதித்தாள். தேவி, ரம்யா ரொம்ப பறக்காமல் கொஞ்சம் கண்ணைத் தொறந்து நடந்து வா, விழுந்து தொலைச்சிறாத! என்று கடிந்துகொண்டாள். வீட்டினுள் நுழையும் போதே குதூகலத்துடன் துள்ளல் நடையில் வருபவளைப் பார்த்து அம்மாவிற்கு வியப்பாக இருந்தது. அம்மாவைப் பார்த்து புன்னகைத்தவள்,  கல்லூரிப் பையை சோபாவில் வைத்துவிட்டு, பாடிக் கொண்டே நடந்தாள், "நெஞ்சில் ஜில் ஜில், காதில் தில் தில், கன்னத்தில் முத்தமிட்டால், நீ கன்னத்தில் முத்தமிட்டால்!" அடுக்களையில் நுழைந்தவள், தன்னையறியாமல் பாடிக் கொண்டே கைகளை விரிக்க, அம்மா ஷெல்பில் வைத்திருந்த பாத்திரங்களைத் தட்டி விட, சில கீழே உருண்டோடின. அம்மாவின் காதில் அந்த சத்தம் கேட்டதும், "ரம்யா. அங்கே என்ன பண்ற, உனக்குப் பசிக்குதுன்னா, நான் எடுத்துத் தரேன். நீயா எடுக்கறேன்னு, எல்லாத்தையும் போட்டு உடைக்காத!" என்று அம்மா சொல்லவும், வேகமாக கீழே கிடந்த பாத்திரங்களை மறுபடியும் ஷெல்பில் அதது இருந்த இடத்தில் சரியாக அடுக்கினாள்.

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.