(Reading time: 9 - 17 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

"என்ன இன்னிக்கு உள்ள வரும்போதே, பாடிட்டு வர்ற!" என்று அம்மா கேட்க,  பஸ் ஸ்டாப்ல இருந்து வரும் போது எப்.எம் ல இந்த பாட்டு ஓடிட்டு இருந்துச்சுமா. நல்ல பாட்டு..இல்லம்மா!" என்றாள் ரம்யா. தாய் மகள் பாசத்தைப் பற்றிய பாடல் என்பதால் அப்படி சொல்கிறாள் என்று அம்மா நினைத்துக் கொண்டே, உன் பொறந்த நாளுக்குன்னு தான் கேசரி பண்ணப்போறேன். சரி தானே? அம்மா கேட்க, ஏற்கனவே நான் ஸ்வீட்லாம் சாப்டாச்சு என்று மெல்லிய குரலில் சொன்னவள், தன் நாக்கைக் கடித்தவளாய், சரி சரி பண்ணுங்கம்மா என்றாள்.

அம்மா அடுக்களைக்குள் நின்று கேசரி செய்ய ஆரம்பிக்கவும், ரம்யா தன் அறைக்குச்  சென்று ஆவலுடன் தினேஷின் பரிசைப் பிரித்தாள் அது, ஐஸ்குச்சிகளால் செய்யப்பட்ட அழகான மரவீடு, இதயங்கள் ஒட்டப்பட்டு, வண்ணம் தீட்டி மிகவும் கவனத்தோடு தினேஷ் செய்திருந்தான். தனக்காக இவ்வளவு மெனக்கெட்டு அவன் பரிசைச் செய்திருந்தது ரம்யாவிற்குப் பரவசமாக இருந்தது. அவள் அதைப்பார்த்து ரசித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் சத்யா வீட்டுக்கு வர, அவளிடமும் காட்டினாள். அம்மா கண்ல படாம எப்படி வைக்கப் போற, சத்யா கேட்கவும், நீதான் ரொம்ப கஷ்டபட்டு எனக்காக இதை செஞ்சு கொடுத்தன்னு சொல்லி அம்மா கண் முன்னாடியே தான் வைக்கப்போறேன் என்றாள். அடிப்பாவி, வாயைத் தொறந்தாலே பொய் தானா என்றவளிடம், ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணனும், கணக்கேயில்லாம பொய் சொல்லி காதல் பண்ணனும் என்று சிரித்தாள் ரம்யா. 

மறுநாள், அவர்கள் மீண்டும் சந்திக்கும் போது, அவள் படிகளில் கீழே இறங்க எத்தனிக்கையில் ​​தினேஷ், ரம்யாவின் வலது கையைப் பிடித்துக்கொண்டு, என்னோட பிறந்தநாள் பரிசு எப்படி இருந்தது. இன்னும் வேணுமா என்று கிண்டலாக கேட்க, அவள் வெட்கப்படவும், கனவுல மிதந்துட்டே கால்தடுக்கி விழுந்தராத, படியைப் பார்த்துப்  போ என்று மாடிப் படிக்கட்டுகளில் கவனமாக இருக்கும்படி அவன் அவளை எச்சரிக்கவும், விழுந்து காலை உடைச்சா நீ என்னைத் தூக்கிட்டுப் போக மாட்டியா. என்று அவள் கேட்கவும், உன்னைத் தூக்கிட்டுப் போணும்னா சொல்லு இப்பமே தூக்கிட்டுப் போறேன்.நீ இருக்கிற லைட் வெயிட்டுக்கு உன்னைத் தூக்குறது ரொம்ப ஈசி. அதுக்காக உன் காலையெல்லாம் நீ உடைச்சிக்க வேணாம்னு தினேஷ் சொல்ல, ரம்யா சிரித்துக் கொண்டே விடைபெற்றுச் சென்றாள்.

கல்லூரியில் என்.எஸ். எஸ்  அமைப்பிலிருந்து நடத்தப்படும் ரத்ததான முகாம் பற்றிய அறிவிப்பு வந்தது. ரம்யா, தேவி, மதி, வாணி என்று பெண்களும் பெயர்களைப் பதிந்தார்கள். ரம்யாவும் தேவியும் முகாமுக்கு கிளம்புகையில், ஒரு மாணவன், கொசுக்களுக்கு ரத்ததானம் பண்ற அளவுக்குத்தான் இவங்க ரெண்டு பேரும் இருப்பாங்க. போய் பல்ப் வாங்கிட்டு

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.