(Reading time: 9 - 17 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

அடுக்க, உன் பிரெண்ட் தேவி கோச்சுக்கப் போறாங்க. நீ அவங்க கூட டேபிளுக்குப் போ, ராபினும் வர்ற நேரம். உனக்குப் போன்ல விவரம் சொல்றேன் என்று அவளை அனுப்பி வைத்தான்.

தேவியும் ரம்யாவும் வகுப்புக்குத் திரும்புகையில் எல்லாரும் கசமுசாவென்று பேசிக் கொண்டிருக்க, மேம் வகுப்பில் இல்லை. சர்க்குலர் வந்ததாகவும், மேம் அவசரமாக டிபார்ட்மென்ட் போனதாகவும் மற்ற மாணவிகள் மூலம் தெரிந்து கொண்டனர்.  தினேஷும் சொல்ல நினைத்த அந்த அறிவிப்பு கல்லூரி ஆண்டு விழாக் கொண்டாட்ட நாள் பற்றியது. மதிப்பெண், கலை மற்றும் விளையாட்டுப் போட்டிகளின்  வெற்றியாளர்களின் பெயர் அந்தந்த துறை அறிவிப்பு பலகைகளில் வெளியிடப்படும் என்றும் பரிசு வென்றவர்களுக்குக் கல்லூரி சார்பில் பதக்கங்கள் வழங்கப்படும் என்றும் சர்க்குலரில் தகவல் வந்ததாகத் தெரிந்ததும், யார் முதல் மதிப்பெண்ணுக்கான பரிசை வெல்வார்கள் என்ற ஆர்வம் தேவிக்கு இருந்தது. ரம்யாவோ தினேஷ் சொன்ன பிளான் என்ன என்ற யோசனையில் இருந்தாள்.  வகுப்புகள் முடியும் நேரம் வரவும், மேம் வராமல் கிளம்பவா என்று தயங்க, ஒரு மாணவன், டிபார்ட்மென்ட் சென்று மேமிடம் அனுமதி வாங்கி வரவும், அனைவரும் கிளம்பினர். நோட்டிஸ் போர்டில் ஏதேனும் இப்பவே போட்ருக்காங்களான்னு பார்க்கப் போறேன் என்று தேவி மட்டும் அங்கு சென்றாள். திரும்பி வந்தவள் மிகவும் குதூகலமாக, செமெஸ்டர் மார்க்ஸ்ல ப்ரைஸ் ரெண்டுமே நம்ம கிளாஸுக்குத் தான். ஏ பிரிவுக்கு இல்லை, முதல் பரிசு நீ, இரண்டாம் பரிசு நம்ம கிளாஸ் ரதி. சூப்பர் கங்க்ராட்ஸ் என்று கைகுலுக்கினாள். தன்  தோழியின் வெற்றியை தனது வெற்றியாக நினைத்து மனதில் சிறிதும் பொறாமையின் சாயல் இன்றி மகிழும் தேவியைக் கண்டு ஆச்சரியமாக இருந்தது ரம்யாவுக்கு. ரொம்ப தேங்க்ஸ் தேவி என்று அவளை அணைத்துக் கொண்டாள். “ஏய்! ஏய் விடு என்கிட்டே இதெல்லாம் வேணாம்!” என்று அவளை விலக்கிவிடவும், இருவரும் சிரித்துக் கொண்டே பேருந்துக்குச் சென்றார்கள். அதே சமயத்தில், தினேஷ் ஆண்டு விழா தினத்திற்காக ஒரு திட்டத்தை மனதில் சிறப்பாகத் தீட்டினான். இந்த திட்டத்திற்கு ரம்யா ஒப்புக்கொள்வாளா என்றே தெரியவில்லை. 

தொடர்வேன்

Next episode will be published on 14th Mar. This series is updated weekly on Sunday mornings.

Go to Idho oru kadhal kathai - Pagam 2 story main page

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.