தொடர்கதை - கனவே கலையாதே.... - 10 - தனுசஜ்ஜீ
கதிரின் வீட்டிற்கு செல்வதற்காக அனைத்து வேலைகளையும் முடித்து சமைத்து சாப்பிட்டு இருவரும் 9 மணிக்கே இருசக்கர வாகனத்தில் கிளம்பிவிட்டனர். அவர்கள் சென்று கொண்டிருக்கும் பொழுது,
கதிர் எனக்கு கொஞ்சம் திங்ஸ் வாங்க வேண்டியது இருக்கு அந்த மால் - ல கொஞ்சம் ஸ்டாப் பண்ணுங்க ப்ளீஸ்.
ஓகே தர்ஷீ.....என்று வண்டியை நிறுத்தியவன். அவளை அழைத்துக்கொண்டு அந்த மாலிற்குள் சென்றான்.
என்ன வேணும் தர்ஷீ சொல்லுங்க....
இல்ல கதிர் நானே வாங்கிக்கிறேன். நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க கதிர்.
அவன் தன் பாக்கெட்டில் இருந்த ஐநூறு ரூபாயை எடுத்து சரி நான் இங்க இருக்கேன் தர்ஷீ இத வாங்கிகோங்க என்று நீட்டினான்.
எங்கிட்ட இருக்கு கதிர். நீங்க இத வைங்க செலவுக்கு ஆகும்.
இல்ல தர்ஷீ....
கதிர்ர்ர்.... ப்ளீஸ்
ஓகேங்க போய்ட்டு வாங்க....
தேங்க்யூ கதிர் என்று கூறி விட்டு நேராக டெக்ஸ்டைல் ஷாட்க்குள் சென்றவள் அவளுடைய மாமியார் மற்றும் நாத்தனார்களுக்கு 3 புடவை எடுத்தாள். மாமனாருக்கு வேஷ்டி எடுத்தவள். சட்டை சைஸ் தெரியாததால் தன்னையே நொந்து கொண்டாள். ஏனென்றால் கதிருக்கே தெரியாமல் ஒரு சர்ப்ரைஸ் கொடுப்பதாக நினைத்து இங்கு அழைத்து வந்தாள். ஆனால் அவனின் உதவி இப்பொழுது தேவைப்பட்டது.
கதிர் இருக்கும் இடத்தை நோக்கி செல்வதற்காக வந்தவள். அதற்கு முன் ரெஸ்ட் ரூம் சென்று வரலாம் என்று போனாள். அங்கு அவள் கண்ட காட்சியில் உறைந்து நின்றாள்.
ஏனென்றால் பொது இடம் என்று கூட பாராது அங்கு ஒரு ஜோடி அத்துமீறி சில்மிஷம் செய்துக் கொண்டிருந்தது. அந்த ஆடவனின் முகம் நன்றாக தெரிந்தது. ஆனால் அந்த யுவதி வேறுபக்கம் திரும்பி நின்றிருந்தாள். சிறிது நேரம் உறைந்திருந்தவள். அடுத்த நொடி ச்சீ......என்று திரும்பி வந்துவிட்டாள்.
அவள் திடீரென்று வந்து நிற்கவும் அதுக்குள்ள வாங்கிட்டிங்களா தர்ஷீ என்று கதிர்கேட்க....
அவன் முன் இருந்த தண்ணீரை எடுத்து மடக் மடக்கென்று குடித்து தன்னை ஆசுவாசப்படுத்தியவள். கதிரை நோக்கி என்ன கதிர் இப்புடி இருக்காங்க மனுஷங்க .