ஏனென்றால் தன் திருமணம் திடீரென்று ஆகிவிட்டது. யாருக்கும் எதுவுமே செய்யவில்லையே என்ற ஒரு குறை அவள் மனதில் இருந்தது. அதற்காக அனைவருக்கும் துணியாவது எடுத்து திருப்தி கொள்ள நினைத்தாள். கதிர் அன்று பேசும்பொழுது வருடத்திற்கு ஒரு முறைதான் துணி எடுப்போம் என்று கூறியது அவள் மனதினை ஏதோ செய்தது. அதற்காகவே அவள் துணி வாங்குவதாக தேர்வு செய்தாள். அவள் மனதிருப்தியாக வர கதிர் தான் உம்மென்று வந்தான்.
அவன் முகத்தை கண்டவள் ஏனென்று புரிந்து கொண்டாள். கதிர் உங்க அம்மா, அப்பா சம்மதத்தோட மேரேஜ் நடந்திருந்தால் எல்லாருக்கும் டிரஸ் எடுப்பீங்க தானே...... திடீர்னு என்கூட நடந்ததுனால தான எதுவும் எடுக்கல..... அதுக்காக ஒரு சின்ன காம்பென்ஷேசன். அதுக்கு எதுக்கு இப்புடி மூஞ்சி தூக்கிட்டு வரிங்க.
நீங்க இப்புடி ஏதாவுது சொல்லியே எல்லாத்துக்கும் என்ன சம்மதிக்க வச்சிடுறிங்க தர்ஷீ. ஆனால் எனக்கு கஷ்டமா இருக்கு.
நீங்க எதையும் ஃபீல் பண்ணாம வண்டிய பார்த்து ஓட்டுங்க கதிர்.
இப்படியே இருவரும் பேசியபடியே வீட்டை நெருக்கினர்.
தர்ஷீ உங்களுக்கு எதுவும் சங்கடம் இல்லல்ல..... ஒரு வாரம் உங்க வீட்ல இருக்கிறதா சொல்லிட்டு அடுத்த நாளே கூட்டிட்டு வந்துட்டேன்.
சங்கடமா தான் இருக்கு கதிர்.
என்ன....
ம்ம் ......நீங்க இப்படி கேள்வி கேட்கிற அளவுதான் என்ன புரிஞ்சு வச்சிருக்கீங்கனு நினைக்கிறப்ப சங்கடமாதான் இருக்கு கதிர்.
என்னங்க......
போங்கங்க என்று அவனை வீட்டை நோக்கி முன்னே தள்ள......அவனும் அவளும் சிரித்தபடியே உள்ளே நுழைந்தனர்.
உள்ளே நுழைந்த இருவரும் விழிபிதுங்கி நின்றனர். ஏனென்றால் அனைத்து கூட்டமும் அங்கிருந்தது. தர்ஷினி இதுவரை பார்க்காத இருபத்தைந்து பேரும் அங்கிருந்தனர். நியூ ரிலீஸ்அதுதாங்க ஃபர்ஸ்ட் எபிசோடு-ல சொன்னனே சிங்ககுட்டி அதுகூட இருந்துச்சுன்னா பாத்துக்கங்களேன்.
உள்ளே நுழைந்ததும் கதிரை அவனுடைய அம்மா காச்சு மூச்சு என்று கத்தி தீர்த்து விட்டாள். பிறகு தர்ஷினியை பார்த்தவள் ஏம்மா திடீர்னு என் பிள்ளை கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னா எனக்கு கோவம் வராதா அதுக்காக ரெண்டு பேச்சு கூட நான் பேச