(Reading time: 7 - 13 minutes)
Thoora theriyum megam
Thoora theriyum megam

இந்த நிலைமைக்கு...என் கூட நீ இருந்தா எனக்கு ஒரு தன்னம்பிக்கையும்...மன தைரியமும் தானாகவே வந்திடும்!...” என்றான் கரகரத்த குரலில்.

****

ன்று மாலையே அர்ச்சனா அந்த விஷயத்தை தன் பெற்றோரிடம் தெரிவித்தாள்.

“என்ன பிசினஸ்ம்மா அது?” தேவநாதன் புரியாமல் கேட்டார்.

“அப்பா....பிசினஸ்ன்னா...நீங்க நெனைக்கற அளவுக்கு ரொம்ப பெரிய பிசினஸ் இல்லைப்பா!...ஜஸ்ட்...ஒரு டீலர்ஷிப் அவ்வளவுதான்!...ஒரு வகை வெளிநாட்டு கிரீஸ் மற்றும் ஆயில்களை வாங்கி ஸ்டாக் வெச்சு...அதை இங்க நம்ம நாட்டுல இருக்கற வாடிக்கையாளர்களுக்கு சப்ளை பண்றது...அவ்வளவுதான்!”

“அது செரி...ஏற்கனவே இது மாதிரி ஏகப்பட்ட பேர் இருக்காங்களேம்மா...போட்டி அதிகமாயிருக்குமே?...ஜெயிக்குமா?”

“அப்படியில்லைப்பா...இது ஒரு குறிப்பிட்ட பிராண்ட் கிரீஸ்!...இதுக்கு அதிகாரப்பூர்வ வினியோகஸ்தரே இவருதான்!...அந்த டீலர்ஷிப்பையே ஒரு பெரிய தொகை குடுத்துத்தான் வாங்கியிருக்காரு!...ஸோ...அந்த பிரண்ட் கிரீஸ் வேண்டியவங்க நிச்சயமா இவருகிட்ட்த்தான் வந்தாகணும்!”

“சரிம்மா...அந்த கிரீஸ் இல்லேன்னா ஆட்டோமாடிக்கா வேற கிரீஸ் வாங்கிட்டுப் போறாங்க!”

“அதுதான் இல்லை!...சில உயர்ரக மெஷின்களுக்கு அந்த மெஷினோட தயாரிப்பாளர்களே இந்த பிராண்ட் கிரீஸைத்தான் ரெகமண்ட் பண்ணியிருக்காங்க!...ஸோ..வேற கிரீஸை யூஸ் பண்ண முடியாது!...பண்ணினா மெஷின் கெட்டுப் போகும்!...அதனால அவங்க இவரு கிட்டத்தான் வந்தாகணும்!”

“ஓ”என்று யோசனையுடன் மேவாயைத் தடவிய தேவநாதன், “சரிம்மா...பார்ட்னர்ன்னா...நீயும் ஒரு தொகையை பிசினஸ்ல போடணுமே?...நம்மால முடியுமா?”

“தேவையில்லைப்பா...நான் ஜஸ்ட் வொர்க்கிங் பார்ட்னர்!...அவர் மூலதனம் போடுவார்!...நான் உழைப்பைப் போடுவேன்!....வேலைகள் முழுவதும் என்னோடது!...நிர்வாகம் முழுவதும் அவரோடது!...லாபம் மொத்தமும் அவருக்கே!...எனக்கு என் வேலைக்கு ஏத்த அளவுக்கு ஒரு சம்பளம்!”

“சரிம்மா...உனக்கு சரின்னு பட்டா தாராளமாய்ச் செய்யும்மா!...பாவம், ஒரு கால் இழந்த மனுஷன் நம்பிக்கையோட கூப்பிடறாரு!...செய்யும்மா!...இப்ப பார்த்துட்டு இருக்கற வேலையிலிருந்து வெளிய வர்றதுல உனக்கு ஒண்ணும் சிரமமில்லையே?”

“அதொண்ணும் பிரச்சினையில்லை!”

“அப்ப..அந்தப் பிள்ளைக்கு உதவும்மா!...பாவம்!” என்றார் தேவநாதன்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.