(Reading time: 9 - 17 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 20 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

ல்லூரி ஆண்டு விழாவிற்கானத் தனது  திட்டத்தை அவளிடம் எப்படிச் சொல்லிச் சம்மதம் பெறுவது என்பதே தற்போதைக்கு தினேஷின் யோசனை. அவன் வகுப்பிலும் இறுதிப் பாடவேளையில் ஆசிரியர் இல்லாததால், எல்லாரும் பேச்சில் ஈடுபட்டிருக்க, தினேஷ் மட்டும் ரம்யா அவனின் யோசனைக்கு ஒப்புக் கொள்வாளா இல்லை மறுத்து விடுவாளா  என்று மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தான்.

ஆண்டுவிழாவில் கண்மணிக்கும் பரிசு இருக்குமென்று ரம்யாவுக்குத் தோன்றியது. ஆனால் கண்மணி தற்காலிகமாக வேறு பேருந்தில் வந்து கொண்டிருந்ததாலும், மதிய இடைவேளைகளில் தினேஷைப் பார்க்கப் போவதாலும், கண்மணியைப் பார்த்தே சில நாட்கள் ஆகியிருந்தன.  அவள் கண்மணியை நினைத்த மாத்திரத்தில், இன்று பேருந்தில் அவளே இருந்தாள், “என்ன ரம்யா, டிபார்ட்மென்ட்ல ஐக்கியமாயிட்ட போல.! என்னையெல்லாம் ஞாபகம் இருக்கா?” என்றாள் குத்தலாக. “சாரி கண்மணி! மதியம் உன்னைப் பார்க்க வரணும்னு ஆசைதான்! டைமில்ல!நீயும் வேற பஸ்ல வந்துட்டு இருந்த! ரொம்ப சாரி கண்மணி!” என்றாள்.” கூல் கூல் ரம்யா...சும்மா ஒரு பேச்சுக்குத் தான் சொன்னேன். அப்படிப் பார்த்தா நானும் தான் உன்னைப் பார்க்க வர முடியல! நீ கோவிக்கல!” பார்க்காட்டியும் பேசாட்டியும், நீ என்னை நினைச்சுப்பன்னு தெரியும் கண்மணி. ஹ்ம்ம். உண்மைதான் நானும் உன்னை ரொம்பவே நினைச்சுப்பேன்டி. நீங்க ப்ளட் குடுக்கப் போறேன்னு காமெடி பண்ணீங்களாமே. ஹே உனக்கெப்படித் தெரியும், என்.எஸ்.எஸ்ல தான் எல்லா டிபார்ட்மென்ட் பசங்க பொண்ணுங்க இருக்காங்களே. அதுலயும் நீ ப்ளட் கொடுத்தே தீருவேன்னு அடம்புடிச்சியாமே. உங்காளு ஒன்னும் சொல்லலியா. திட்டினான்.  அவ்ளோ தானா. கார்த்திக்கா இருந்தால் இது மாதிரி சொல்லாம எதாச்சும் செஞ்சா அதுக்கும் ஒரு சண்டை புடிப்பான். ஹ்ம்ம். என்றாள் ரம்யா.

அப்புறம் என்ன ஆண்டு விழா வருது. யார்டி டிபார்ட்மென்ட் பர்ஸ்ட் நீயா? என்றாள் கண்மணி.  ஆமா என்றாள்  ரம்யா. எப்படியோ படிச்சிற. நீயும் தான் ப்ரைஸ் வாங்குவ? கரெட்டா என்றா ரம்யாவிடம் ஆமா ஆனால் உன் மாதிரி படிக்க முடியாது தாயே, நான் தேர்ட் ப்ரைஸ் தான். முதல் மதிப்பெண் ஒரு பையன். இரண்டாம் மதிப்பெண் ஒரு பொண்ணு பி செக்சன்ல நான் தான் மூன்றாவது இடம் என்றாள் கண்மணி.  கலக்குற என்ற ரம்யா. நீ வீட்ல கொஞ்சம் அடிவாங்காம இருந்தால் முதலிடம் தான் வாங்குவ என்றாள். ச்சே ச்சே அப்படிலாம் இல்ல என் திறமை அவ்ளோதான் என்றாள். வீடு வந்து சேர்ந்ததும், ஆண்டு விழாவில் தனக்கு பரிசு இருப்பதைக் கூறினாள் ரம்யா. அம்மா மிகவும் மகிழ்ச்சியுடன் உடனே அப்பாவுக்கும் போன் போட்டு சொல்லி தனது சந்தோஷத்தைப் பகிர்ந்தார். அடுத்த அழைப்பொலி வரவும், ரம்யா விரைந்து எடுக்க, சத்யா தான் கூப்பிடுறா என்று பொய் சொல்லிவிட்டு, தினேஷிடம் பேசத்

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.