(Reading time: 9 - 17 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

தொடங்கினாள். “ஹே நான் தான் எங்க டிபார்ட்மென்ட்ல பர்ஸ்ட் ப்ரைஸ்!” என்றாள் உற்சாகமாக. அவனும் மகிழ்ச்சியாக வாழ்த்துவான் என்றெண்ணியவளுக்கு ஏமாற்றமான குரலில் அவன், “போச்சா, எல்லாம் போச்சா, இதுக்குத் தான் இந்த கிளாஸ் டாப்பர், டிபார்ட்மென்ட் டாப்பர் பொண்ணெல்லாம் லவ் பண்ணக்கூடாது!” என்றான்.

“ஏன் நான் ப்ரைஸ் வாங்குறது உனக்கு மகிழ்ச்சியா இல்லையா?” என்றாள்.

“ நீ ப்ரைஸ் வாங்குறது மகிழ்ச்சி தான்! ஆனால் என் ப்ளான் போச்சே!”

“அப்படி என்ன தான் நீ பிளான் பண்ணிருந்த!”

“ஆண்டு விழா பங்க்ஷனை அட்டென்ட் பண்ணாமல், இரண்டு பேரும் எங்காவது வெளில போலாம்னு நினைச்சேன்!”

“வெளில கூப்பிடற அவ்வளவு தைரியமா உனக்கு!” என்றாள் ரம்யா.

“வெளிலனா எதோ பார்க், சினிமான்னு நினைச்சுட்டுப் பேசுறியா?”

“அப்புறம் எங்க கூப்பிடுறியாம்?”

“ஹ்ம்ம். உன்னைக் கூட்டிட்டு எனக்குப் பிடிச்ச ஒரு கோவிலுக்குப் போகலாம்னு நினைச்சிருந்தேன்!”

“கோவிலா! அப்படினா நான் வர்றேன்!” என்றவள்

“எந்தக் கோவில்?” என்றாள்.

“மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில்“ எனவும் அவளுக்கு சிலிர்த்தது. அது அவளுக்கு மிகவும் பிடித்த கோவில்.

கல்லூரியில் இருந்து ஒன்றரை  மணி நேரம் மதுரைக்குப் போக, கோவிலில் ஒரு இரண்டு மணி நேரம், ஒன்றரை மணி நேரம் திரும்ப கல்லூரிக்கு வர. ஆக மொத்தம் ஐந்து மணி நேரம் ஆகும். நான் உன்கூட எந்தக் கவலையும் இல்லாம ஒரு ஐந்து மணி நேரம் நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சேன்.

ஐந்து மணி நேரமா என்று ரம்யா வியக்கவும், தினேஷ் மாற்று வழியை உடனடியாக சிந்தித்து,

ஒரு ஐடியா, நான் மதியம் கிளம்பிப் போயிட்டு, பங்க்ஷன் நடக்கிற நேரத்தை ஒத்துவர்ற மாதிரி திரும்பி ஈவ்னிங் வரலாம்னு நினைச்சேன். இப்போ சின்ன மாறுதல். காலைல சீக்கிரம் வந்திரு. அட்டெண்டன்ஸ் கொடுத்துட்டு இல்லை, பிராக்ஸி பண்ணிட்டு கிளம்பிருவோம். மதியம்  இரண்டு மணிக்கு திரும்ப காலேஜுக்கு வந்துரலாம். நாலு மணிக்குத் தானே விழா தொடங்குது. நீ விழால கலந்துக்கோ. பரிசையும் வாங்கிக்கோ!”

இதெல்லாம் சரி வருமா தினேஷ்? உன் கூட வர எனக்கு ஆசை தான். ஆனால் எப்பவுமே ஆண்டு விழாக்கு அம்மா அப்பா வந்திருக்காங்க. நான் பரிசு வாங்கும் போது அவங்க கூட இருப்பாங்க. இப்போ அவங்க இல்லாம எப்படி? என்ன செய்ய?

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.