(Reading time: 6 - 12 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

"நாங்கல்லாம் நன்னாயிருக்கோம், நீ எப்படிருக்கே அபு?"

“நான் நல்லாயிருக்கேன் அம்மீ, என்ன விஷயம் போன் செய்திருக்கீங்க?"

"அது வந்து, நம்ம துாரத்து சொந்தம் ஒரு பொண்ணு, உனக்கு முடிவு செய்திருக்கோம்,நீ ஒரு முறை வந்து பொண்ண பாத்துட்டு உன் சம்மதத்தை சொல்லு சீக்கிரமே நிக்கா வச்சுக்குவோம்."

"நிக்கா யாருக்கு, எனக்கா? என்ன அம்மீ அவ்வளவு அவசரம்? எனக்கு இப்ப நிக்கா வேணாம் அம்மீ!"

“ஏம்பா, நீ யாரையாவது காதலிக்கிறியா?"

"ஐயோ ! இல்ல அம்மீ! "

"அப்ப இந்த பொண்ண நிக்கா பன்றதுல உனக்கு என்ன கஷ்டம்?"

" என்ன அம்மீ, நான் இன்னும் படிப்பு முடிக்கனும், வேலை கிடைக்கனும், இன்னும் எவ்வளவோ இருக்கு அம்மீ, இவ்ளோ சீக்ரம் எனக்கு நிக்கா வேண்டாம் அம்மி ப்ளீஸ்!"

"நம்ம சொந்தக் காரங்கல்லாம் கேக்கறாங்க அபு, ஏன் பையனுக்கு இன்னும் நிக்கா செய்யலன்னு. "

“அம்மீ, எந்த காலத்தில இருக்கீங்க ,யாரோ கேட்டாங்கன்னு, என்னை இப்பவே நிக்கா செய்ய சொல்றீங்க, எனக்கு வேலை இல்ல

இன்னும் சம்பாதிக்கல, எப்படி அம்மீ?"

"இத பார், நமக்கு பணத்துக்கு ஒன்னும்

 குறைவில் லை, வேலை இல்லையா,, அப்பாவோட மியுஸிக் ட்ரூப்பில் சேர்ந்துடு."

தொடரும்...

Next episode will be published on 22nd Mar. This series is updated weekly on Mondays.

Go to Em mathamum sammatham story main page

10 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.