(Reading time: 6 - 11 minutes)
Thoora theriyum megam
Thoora theriyum megam

தொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 20 - முகில் தினகரன்

ந்த சுபயோக சுப தினத்தில் சுலோச்சனாவின் திருமணம் அதிக ஆடம்பரமின்றி, அதே நேரம் மிக எளிமையுமின்றி, சிறப்பாகவே நடந்தேறிய போது, தேவநாதன் குடும்பத்தில் அனைவரும் தங்களது முதல் நன்றியை சம்பூர்ணத்திற்கு தெரிவித்தனர்.

சுலோச்சனாவோ இன்னும் ஒரு படி அதிகம் போய், தன்னுடைய பெற்றோரைக் கூட விட்டு விட்டு தன்னுடைய முதல் ஆசியை சம்பூர்ணத்தின் காலில் விழுந்து பெற,

அந்த அன்பில் நெகிழ்ந்து போன சம்பூர்ணம், தான் இது நாள் வரையில் அவர்களிடமெல்லாம் ஒரு சர்வாதிகாரி போல் நடந்து கொண்ட விதத்தை எண்ணி எண்ணி வேதனித்தாள்.

இந்த உலகத்தில் அன்பிற்கு ஈடு எதுவுமில்லை, அன்பில் உள்ளதுதான் வாழ்க்கை, என்பதைப் புரிந்து கொண்டு தன்னைத் தானே மாற்றிக் கொண்டாள். அவள் அவ்வாறு தன்னை மாற்றிக் கொண்ட பிறகு, அந்தக் குடியிருப்பிற்குள் விழும் சூடான வெயில் கூட குளிர்ச்சியையே தந்தது. அனலோடு வரும் காற்றும் கூட தென்றலாய் மாறி வீசியது.

ஒரு காலை இழந்து, பெற்றெடுத்த தந்தையையும் இழந்து. பார்த்துக் கொண்டிருந்த வேலையையும் துறந்து, துயரமே உருவாய் தாய் நாடு திரும்பியிருந்த சுரேஷ், தற்போது அதிக பட்ச புத்துணர்ச்சியோடு, அதீத நம்பிக்கையோடு, வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடத் தயாரானான்.

அதன் முதல் கட்டமாய், சுலோச்சனாவின் திருமணம் முடிந்த மறு வாரமே, நகரின் மத்தியிலிருந்த ஒரு பெரிய வணிக வளாகத்தில், “சுரேஷ் அசோஸியேட்ஸ்” நிறுவனம் அமர்க்களமாய்த் துவக்கமானது.

சுரேஷின் தொழில் அனுபவமும், அர்ச்சனாவின் திறமையான திட்டமிடலும் இணைந்ததில் சுரேஷ் அசோஸியேட்ஸ் ஆரம்ப சிலையிலேயே அற்புதங்கள் நிகழ்த்தியது.

செயற்கைக் காலோடு சிறிதும் மனம் தளராமல், சுரேஷ் மார்க்கெட்டிங் செல்ல, அவனது அந்த தளரா முயற்சிக்காகவே, வாடிக்கையாளர்கள் தங்களது ஆர்டர்களைத் தாராளமாய் அவனுக்கு வழங்க, ஆர்டர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாய் வரத் துவங்கின.

வந்து குவியும் ஆர்டர்களை நேர்த்தியாய்க் கையாண்டாள் அர்ச்சனா. சற்றும் கால தாமதம் செய்யாமல், குறித்த காலத்திற்கு முன்பாகவே வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை சப்ளை செய்வதை ஒரு கோட்பாடாகவே வகுத்துக் கொண்டு செயலாற்றினாள்.

அந்தச் செயல்பாடு “சுரேஷ் அசோஸியேட்ஸ்”க்கு சந்தையில் ஒரு நல்ல பெயரைப் பெற்றுத் தந்ததோடு அல்லாமல் பல புதிய வாடிக்கையாளர்களையும் உருவாக்கித் தந்தது.

இருவரும் கால நேரம் பாராது, கடுமையாக உழைத்ததில் உயர்வு அவர்களிடம் வலிய வந்து ஒட்டிக் கொண்டது.

3 comments

  • Nice episode :hatsoff: . Movie la ore song la ellam nadakura maathiri Inka ore episode la niraya nadanthidu :clap: . Archana kida marriage proposal panna Muthal Suresh thelivaahanume :Q: .waiting for next episode :-) .

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.