(Reading time: 9 - 18 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 22 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

சொல்றேன் ரம்யா! சொல்றேன் என்ற தேவி, ஆனால் அதுக்கு பதிலா நீ ஸ்டடி ஹாலிடேஸ்ல என்கூட மட்டும் தான் சேர்ந்து படிக்க வரணும் என்றாள். முந்தைய வகுப்புகளில் நடந்த சில சம்பவங்களே தேவி தன் கூட மட்டும் படிக்கணும் என்று கண்டிஷன் போடக் காரணம் என்பதைப் புரிந்து கொண்டே  அவள் கேட்டதற்கு ஒப்புதலாகச்  சரி என்றாள் ரம்யா. 

அந்த ஒரு வாரத்தில், ரம்யாவுக்கு 3 ஆசிரியர்களிடமிருந்து வெவ்வேறு சமயங்களில் பாராட்டு கிடைத்திருந்தது, ஒரு அல்காரிதம் பேப்பரில் அசைன்மென்ட் நன்றாக முடித்தது, வகுப்பில் ஒரு டேடாபேஸ் ப்ராப்ளம் சால்வ் பண்ணியது, கம்பியூட்டர் ஆர்கிட்டெக்சர் தேர்வுத்தாளை மிகச்சிறப்பாக எழுதியது என மூன்று ஆசிரியர்கள் வகுப்பில் அவளைப் பாராட்டிப் பேசினர். வகுப்பில் ரம்யாவுக்கு சிறப்புக் கவனம் கிடைக்க, ரதியும் வாணியும் எரிச்சலைடைந்தனர். கம்ப்யூட்டர் ஆர்க்கிட்டெக்சர் மேம் ரம்யாவின் பேப்பரை எல்லாரிடமும் காண்பித்து, பரீட்சை விடைத்தாளை ஒவ்வொருவரும் இது போல் எழுதுங்கள் என்று சொன்னார். அவர் அடுத்த செய்த விஷயம் தான் தேவியைக் காயப்படுத்திவிட்டது. ரம்யாவின் அருகிலேயே அமர்ந்திருக்கும் தேவியைப் பார்த்து, “நீயும் அவ பக்கத்துல தானே இருக்க, சில்லி மிஸ்ட்டேக்ஸ் பண்ணி எப்படி மார்க்ஸ் உடுற தெரியுமா?” என்று  கவனக்குறைவாக சில தவறுகளைச்  செய்ததற்காக தேவி மீது அவளின் விடைத்தாளைத் தூக்கி  வீசவும், தேவி அழ, ரம்யாவுக்கும் அழுகை வந்தது. வகுப்பு முடிந்ததும்,  சாரி தேவி. மேம் அப்படி கம்பேர் பண்ணி பேசிருக்கக் கூடாது ரம்யா சொல்ல, தேவியோ,  “விடு ரம்யா, மேம் என் நல்லதுக்குத் தான் திட்றாங்க, ஆனால் பேப்பரை அப்படி எறிஞ்சிருக்க வேண்டாம்!” என்றாள். ஹ்ம்ம். என்ன பண்ண எதோ டென்சன் அவங்களுக்கு என்று ரம்யா அவளை சமாதானப் படுத்தியிருந்தாள்.

முதலில் ரம்யாவை, கண்ணை மூடிக் கொள்ளச் சொன்ன தேவி, அவளுக்குப்  பிடித்த எண், பிடித்த நிறம், பிடித்த மலர், பிடித்த உணவு, பிடித்த வாசனை என்று சில கேள்விகளைக் கேட்டுக் கொண்டே, பென்சிலால், இடது உள்ளங்கையில் ட்ரேஸ் செய்வது போல் பாவனையில் எழுதிக்கொண்டே வந்தாள். அவளின் உள்ளங்கையில் ஒரு நரம்பின் மேல் வரைந்து காட்டியவள், ‘டி’  D னு தெரியுது ரம்யா என்று சொல்லவும் அவளின் முகத்தில் திருப்திப் புன்னகை. உனக்கு என்ன லெட்டர் வந்துச்சு. தேவி யோசித்த பாவனையில் இசட் z னு வந்துச்சு,  எனவும், அப்போ சாகிர், சக்கரியான்னு இருக்குமா பேரு என்றாள் ரம்யா குறும்பாக. உதைப்பேன் என்ற தேவியிடம், ப்ளேம்ஸ் தெரியுமா அதுல எனக்கும் தினேஷுக்கும் எம் வந்துச்சு, எம் னா மேரேஜ் என்றாள் சிரிப்புடன். இவர்கள் இப்படிக் கையில் ரேகை பார்த்து விளையாடிக் கொண்டிருப்பதைக் கவனித்த ரதியும், வாணியும், அருகில் நாற்காலிகளை இழுத்து வந்து அமர்ந்தனர், மற்ற

10 comments

  • நன்றி தோழி ! தினேஷுக்கு கடினமான நேரம் தான் :sad:
  • நன்றி தோழி ! தினேஷுக்கு கடினமான நேரம் தான் :sad:
  • நன்றி தோழி! தினேஷுக்கு கடினமான நேரம் :sad:
  • சில நேரம் வார்த்தைகளை சிலர் கொட்டி காயப்படுத்தி விடுவாங்க கிளாஸ்ல. என்ன பண்ண :no: :thnkx: தோழி!
  • Rums over sensitive ah irukanga la facepalm nice update ma'am 👏👏👏👏👏👏👏 ethukku indha dam opening???? Devi is :cool: <br />nalla Frnd!! Senseless.lecturer 😈😈<br />Lookk forward to see what happens next.<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.