(Reading time: 15 - 30 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

தொடர்கதை - எம் மதமும் சம்மதம் – 04 - விஜேஜி

வன் அங்கிருந்து கிளம்பி மாடிக்கு சென்று விட்டான். தன் கடந்த காலம் நினைவில் வந்தது, ஏன் அவசர அவசரமாக நிக்கா செய்துகிட்டோம் என்று பல விதமாக யோசித்துக் கொண்டிருந்தான்.....

அவன் கோயம்புத்துரில் இஞ்ஜினியரிங் படிக்கும் போது கடைசி வருஷத்தில் ஒரு நாள் ,  அம்மீ போன் செய்தாங்க  “ஹலோ அம்மீ எப்படி இருக்கீங்க? "

"நாங்கல்லாம் நன்னாயிருக்கோம், நீ எப்படிருக்கே அபு?"

“நான் நான் நல்லாயிருக்கேன் அம்மீ, என்ன விஷயம் போன் செய்திருக்கீங்க?"

"அத வந்து, நம்ம துாரத்து சொந்தம் ஒரு பொண்ணு, உணக்கு முடிவு செய்திருக்கோம்,நீ ஒரு முறை வந்து பொண்ண பாத்துட்டு உன் சம்மதத்தை சொல்லு சீக்கிரமே நிக்கா வச்சுக்குவோம்."

"நிக்கா யாருக்கு, எனக்கா? என்ன அம்மீ அவ்வளவு அவசரம்? எனக்கு"எனக்கு இப்ப நிக்கா வேணாம் அம்மீ."

“ஏம்பா, நீ யாரையாவது காதலிக்கிறியா?"

"ஐயோ ! இல்ல அம்மீ 1"

"அப்ப இந்த பொண்ண நிக்கா பன்றதுல உணக்கு என்ன கஷ்டம்?"

" என்ன அம்மீ, நான் இன்னும் படிப்பு முடிக்கனும், வேலை கிடைக்கனும், இன்னும் எவ்வளவோ இருக்கு அம்மீ. இவ்ளோ சீக்ரம் எனக்கு நிக்கா வேண்டாம் அம்மீ,ப்ளீஸ்....."

"நம்ம சொந்தக் காரங்கல்லாம் கேக்கறாங்க அபு… ஏன் பையனுக்கு இன்னும் நிக்கா செய்யலன்னு?"

“அம்மீ, எந்த காலத்தில இருக்கீங்க ,யாரோ கேட்டாங்கன்னு, என்னை இப்பவே நிக்கா செய்ய சொல்றீங்க, எனக்கு வேலை இல்ல,

இன்னும் சம்பாதிக்கல, எப்படி அம்மீ?"

"இத பார், நமக்கு பணத்துக்கு ஒன்னும் குறவில்ல, வேலை இல்லயா, அப்பாவோட மியுஸிக் ட்ரூப்பில் சேர்ந்துடு, இதல்லாம் பெரிய விஷயமா" என்று கேட்டு அவன் வாயை அடைத்து விட்டார்.

“சரி ஊருக்கு வரேன்!” என்று பேச்சை முடித்தான்.

எப்பவுமே அவன், அம்மா அப்பா பேச்சை மீறாதவன், அம்மா யோசிக்காமல் எதையும் செய்யமாட்டார். இப்பவும் அம்மாவிடம் தர்கம் செய்ய்விரும்பவில்லை.

ஊருக்கு போனான்,பெண்ணை பார்த்தான், அவனுக்கு பெரிய விருப்பம் இல்லா விட்டாலும்

"அம்மீ , உங்களுக்கு பிடித்தால் எனக்கு போதும்" என்று கூறிவிட்டான்.

12 comments

  • Hi Tamil Sri. Thanks for your comments. Please continue to read my further epi and keep commenting to improve my writing.<br /><br />VJG
  • Thanks MadhumathI for your continuous support. You have been encouraging me from the very beginning. Thanks a lot. Looking forward to you continued support.<br /><br />VJG
  • Good evening, dear VJG! ரொம்ப உருக்கமான எபி! படிக்கும்போது கன்னங்களில் கண்ணீர் வழியுது! கதை, டயலொக், உறவு, சூழ்நிலை எல்லாம் சரியான விகித்த்தில் கலந்து முழு திருப்தி தருகிறது! அற்புதமான எழுத்தாளர் நீங்க! வளர்க உன் திறமை!
  • aaha .. idhu enna ippide oru vishayam. appo nijama dhanam than andha ponna or pona episodela vandha ponnu dhanam avangaloda relativea
  • Nice episode ma'am :hatsoff: .Ipidi irukalaam nu naan ninaikave illa ma'am facepalm . Ini enna panna poraanka :Q: . Waiting for next episode ma'am :-) .

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.