(Reading time: 7 - 13 minutes)
Neeyaga naan naanaga nee
Neeyaga naan naanaga nee

தொடர்கதை - நீயாக நான்!...நானாக நீ - 10 - முகில் தினகரன்

றுநாள் மதியம் மூன்று மணியிருக்கும்,

                    தன் அறையில் அமர்ந்து பேய்கள் பற்றிய ஒரு ஆங்கிலப் புத்தகத்தை அதீத ஈடுபாட்டுடன் படித்துக் கொண்டிருந்த முகிலனின் செல்போன், “என்னைத் தாலாட்ட வருவாயா?...நெஞ்சில் பூ மஞ்சம் தருவாயா?” என்று சன்னக் குரலில் பாட

                    எடுத்துப் பார்த்தான் அதில் ராதிகாவின் பெயர் வர உடனே இணைப்பிற்குள் புகுந்து.

                    “என்ன ராதிகா திடீர்னு இந்த நேரத்துல போன்?” கேட்டான்.

                    ”ஈவினிங் மீட் பண்ணலாமா?...ஒரு முக்கியமான விஷயம்!” என்றாள் அவள்.

                    “என்ன ராதிகா?” முகிலனும் பதட்டமானான்.

                    “அதைப் போன்ல சொல்ல முடியாதுப்பா...நேர்லதான் சொல்ல முடியும்!

                    “ஓ.கே!..வழக்கம் போல நம்ம “காஃபி டே” ரெஸ்டாரெண்ட்ல மீட் பண்ணுவோம்!” என்றான் முகிலன்.

                    தொடர்ந்து அவனால் அந்தப் பேய் புத்தகத்தை ஊன்றிப் படிக்க முடியவில்லை.

       “என்னவாயிருக்கும்?..ஏன் ராதிகா பதட்டமாய்ப் பேசினா?” நிலை கொள்ளாமல் தவித்தான்மாலைக்காகக் காத்திருக்கலானான்.

                    உள்ளக் கிடக்கையின் உத்வேகத்தால் ராதிகா ஆறு மணிக்கு வரச் சொல்லியிருந்தது நன்றாகவே ஞாபகத்தில் இருந்த போதும் ஐந்தரைக்கே வந்து காத்திருந்தான்.

                    சரியாக ஆறு மணிக்கு அவள் வந்தவுடன் முதல் கேள்வியாய் அதைக் கேட்டான் “ஏதோ முக்கியமான விஷய்ம் பேசணும்னு சொன்னியே?...என்ன விஷயம்?”

                    அவனது அவசரத்தைப் பார்த்து உள்ளுக்குள் நகைத்துக் கொண்டவள்

                    “சொல்றேன்..சொல்றேன்!...அதைச் சொல்லுவதற்காகத்தானே நானே வந்திருக்கேன்?...மொதல்ல ஒரு காலியான மேசையைத் தேடி உட்காருவோம்!..பேரரை வரச் சொல்லி காஃபி ஆர்டர் பண்ணுவோம்!...” சொல்லியவாறே ராதிகா காலி மேசையைத் தேடி நடக்க, அவள் பின்னாலேயே சென்றான் முகிலன்.

                    சற்றுத் தள்ளி ஒரு மேசை காலியாயிருக்க இருவரும் அமர்ந்தனர்.

                    அவர்கள் அமர்ந்த அடுத்த நிமிடமே கையில் குறிப்பேட்டுடன் வந்து நின்றான் பேரர். “ஆர்டர் ப்ளீஸ்!

                    “ம்ம்ம்...என்ன முகி?...காஃபி ரெண்டு ஆர்டர் பண்ணிடவா?”

                    “ஓ.கே!” அவனது முழுச் சிந்தனையும் ராதிகா சொல்லப் போகும் விஷயத்தைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது.

                    பேரர் சென்றதும் “ம்...அதான் காஃபி ஆர்டர் பண்ணியாச்சல்ல?..இப்பச் சொல்லு!” அவள்

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.