(Reading time: 7 - 13 minutes)
Neeyaga naan naanaga nee
Neeyaga naan naanaga nee

பதில் சொல்லுவானாம்!

                    “ஏன்?”

                    “அதுதான் அவங்களுக்கும் ஆரம்பத்துல புரியலை!...அப்புறம் எப்பப் பார்த்தாலும் யாரோ கை விரலைப் பிடிச்சுக்கிட்டு அவனை நடத்திக் கூட்டிட்டுப் போற மாதிரி தன் கையை கொஞ்சமாய் மேலே தூக்கி விரலை நீட்டிக் கொண்டே அவன் பாட்டுக்கு நடந்து போய்க்கிட்டே இருப்பானாம்!...ஒரு நாள் வத்சலாவோட அக்கா இதைத் தன் கணவரிடம் சொல்ல, அவன் மகனைக் கூப்பிட்டு சாந்தமாய்க் கேட்டிருக்கிறார்

                    “எங்கே தம்பி தனியாய்ப் போயிட்டு வந்தே?” என்று அதுக்கு அவன் சொன்னானாம் “நான் தனியா போகலை...அக்கா கூடத்தான் போனேன்...அவங்கதான் என்னை விரலைப் பிடிச்சுக் கூட்டிட்டுப் போனாங்க!”என்றானாம்.

                    ம்...அப்புறம்?” முகிலன் சீரியஸானான்.

                    “ஒரு முறை, வழக்கம் போல் அவன் விரலைத் தூக்கிப் பிடிச்சுக் கிட்டு மெல்ல மெல்ல மாடியேறி மொட்டை மாடிக்குப் போக, அந்த வத்சலா அக்காவும் பின்னாடியே போயிருக்காங்க!...மொட்டை மாடிக்குப் போனவன் சற்றும் யோசிக்காமல் அங்கிருந்த மொட்டை மாடிக் கைப்பிடிச் சுவர் மீது ஏறி நின்று கொண்டு கீழே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தானாம்!......அது எட்டு மாடிக் கட்டிடம்...அங்கிருந்து கீழே விழுந்தா அவ்வளவுதான்!...போதாக் குறைக்கு காத்து வேற அப்ப படு வேகமா வீசிட்டு இருந்திருச்சாம்!...பயல் அவ்வப்போது “கல...கல”வென்று சிரிக்க வேற செய்தானாம்!...வத்சலா அக்காவுக்கு உயிரே போயிடுச்சாம்!...ஓடிப் போய் அவனை அந்தக் கைப்பிடிச்சுவரிலிருந்து கீழே இறக்க வேண்டித் தூக்க யாரோ அவனை இறுகப் பிடிச்சுக்கிட்டு தூக்கவே விடலையாம்!...அக்கா கொஞ்சம் பல்கியான ஆளு...அதனால தன்னோட மொத்த பலத்தையும் பிரயோகித்து அவனை கைப்பிடிச் சுவற்றிலிருந்து இறக்கிக் கீழே நிக்க வெச்சாங்களாம்!

                    “ம்ம்..ம்ம்”

                    “அப்போதும் கூட பயல் தன் தாயைப் பார்க்காமல் வெற்றிடத்தைப் பார்த்துக் கொண்டே பேசினானாம்!

                    “அவன் கண்ணுக்கு அது தெரிஞ்சிட்டிருக்கு ராதிகா!

                    “கிளைமாக்ஸைக் கேளுங்க!...சரி இங்க நின்னாத்தானே பிரச்சினை பயலை தூக்கிக்கிட்டு உடனே கீழே போயிடலாம்ன்னு பையன் கையைப் பிடிச்சு

                    “வாடா கீழே போகலாம்!” என்று சொல்லி பயலின் இடது கையைப் பிடிச்சு வத்சலா அக்கா இழுக்க அவன் வலது கையையும் யாரோ பிடிச்சு இழுக்கற மாதிரி அவன் தன் கையை மேலே தூக்கி நீளமாய் நிறுத்திக் கொண்டு கத்தினானாம்!

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.