மறுநாள் காலை வழக்கம் போல தன்னுடைய பயிற்சிக்கு கிளம்பியவன் துள்ளலுடன் மாடியிலிருந்து இரண்டிரண்டு படிகளாக தாவி இறங்கி வந்தான் விஷ்வா.
கூடவே வாயில் ஏதோ ஒரு பாட்டுக்கு விசில் அடித்தபடி ஹம் பண்ணிக் கொண்டு வந்தான். இறங்கும் பொழுதே அவள் பார்வை கீழ்தளத்தில் இருந்த டைனிங் ஹாலுக்கு செல்ல, அடுத்த நொடி ஜெர்க் ஆகிப் போனான்.
சந்திரசேகர் தன் காலை உணவை அப்பொழுதுதான் உண்ண ஆரம்பித்திருந்தார். அவருக்கு எதிராய் வீராவும், சேகரின் பக்கத்தில் அவர் செல்ல மகள் விஷாலினியும் அமர்ந்திருந்தனர்.
ராஜி சமையலறையில் பூரியை சுட்டு எடுத்து கொண்டு இருக்க, வர்ஷினி தான் அவர்களுக்கு பரிமாறிக் கொண்டிருந்தாள். கூடவே தன் மாமியார் எடுத்து போடும் பூரியை எடுத்து வந்து ஒவ்வொருவர் தட்டிலும் வைத்து கொண்டிருந்தாள்.
கீழே இறங்கி வந்து கொண்டிருந்த விஷ்வா வின் பார்வை தன் தந்தையிடம் சென்றது.
“ஐயோ...இவர் இன்னும் கிளம்பலையா? தெரியாம வந்து மாட்டிகிட்டேனே.. இன்னைக்கு செத்தான் சேகரு மவன்...” என்று உள்ளுக்குள் புலம்பிக் கொண்டாலும் தன் கெத்தை விடாமல் கையில் கார் சாவியை சுழற்றியபடி டைனிங் ஹாலுக்கு சென்றான்.
தன் முன்னால் இருந்த தட்டைப் பார்த்து சாப்பிட்டு கொண்டிருந்த சேகர் நிமிர்ந்து பார்க்க, தன் மகனைக் கண்டதும் அவருக்குமே ஜெர்க் ஆனது.
“சை...இவன் இன்னும் கிளம்பித் தொலையலையா? “ என்று மனதுக்குள் திட்டிக் கொண்டவர், அவனை ஒரு முறை முறைத்துவிட்டு தன் தட்டை பார்த்து உண்ண ஆரம்பித்தார்.
“ஆஹா...நம்மளை பார்த்தும் சேகர் எப்படி இவ்வளவு அமைதியா சாப்பிடுகிறார். இது தப்பாச்சே...” என்று எண்ணிக்கொண்டே அருகிலிருந்த தன் தங்கையை பார்த்து, பார்வையால் என்ன ஆச்சு என்று கேட்க, அவளும் தன் கழுத்தை நொடித்தவள் வாயை இரண்டு பக்கமும் இழுத்து காட்டி அவனை முறைத்து விட்டு மறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.
“பாருடா...இந்த கால் படியெல்லாம் முகத்தை இந்தத் திருப்பு திருப்புது. எல்லாம் என் நேரம்...” என்று அதற்கும் ஒரு கமெண்ட்ரி கொடுத்துக் கொண்டு அருகில் சென்றவன் தன் தந்தையை வெறுப்பேத்த வேண்டுமென்றே அவருக்கு எதிரில் இருந்த இருக்கையில், வீராவுக்கு அடுத்த இருக்கைக்கு சென்றவன்,
“ஹாய் வீர்... குட் மார்னிங்...” என்று புன்னகைத்தவாறே அமர்ந்து கொண்டவன் அவரின் கழுத்தை கையால் சுற்றி தன் பக்கமாக இழுத்து அவர் கன்னத்தில் முத்தம் வைத்தான்.
அதைக் கண்ட சேகருக்கு இன்னும் எரிச்சல் வந்தது. அவர் சாப்பிட்டு கொண்டிருந்த தட்டை தூக்கி நங் என்று மேஜையில் வைத்தார். அந்த சத்தத்தில் சமையல் அறையில் இருந்த ராஜி
Pottu thakku Ammu.. She s very cool person..
Ipom dull ammu dhool Ammu aagitanga pola..
Paarda Vishva ipom make up lam panraru...
Viswa ku match ahna life partner dhan..
Angry Bird Vishva Ini dhan love bird aaga poraru. 💗💗
Vishva oda secret of energy ini " AMMU" dhan..
Apdiyae Oru honeymoon trip Kodaikanal ku potarlama.. 🤗
Romantic started nice to see that pair 😍😍😍😍😍😍...
Good going paddu sis...
Waiting for next romantic episodes...☺☺☺☺
Ammu sema da kanna nee..