(Reading time: 10 - 20 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 24 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.

சூரிய வெப்பத்தின் காரணமாக  அதீத வியர்வை, அதனால் உடலில் நீரிழப்பு மற்றும் நீண்ட நேரம் வெயிலில் வரிசையில் நின்றதால்  ஏற்பட்ட களைப்பினால் ரம்யா மயக்கம் அடைந்திருந்தாள். ஜூஸ் கடையில் நின்றிருந்த சில மாணவர்கள் மாணவிகள்  முகத்தில் சோடா தெளித்து எழுப்பி அவளுக்குக் குடிக்க  எலுமிச்சை சாறு தரவும், மயக்கம் தெளிந்து கொஞ்சம் தெம்பு கிடைத்து எழுந்தாள்.  தேவியும் ரம்யாவைப் பார்த்து,. நீ சரியாக சாப்பிடாமல் இருந்துட்டு உன் உடம்பைப் பாழாக்கு என்று திட்டினாள். தனக்குதவிய மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் நன்றி சொன்ன ரம்யாவை, ஓய்வெடுக்கும்படி சொல்லிவிட்டுச் சென்றார்கள். தேவி ரம்யாவின் பிறந்த நாளில் தினேஷ் அவளின் கன்னத்தில்  முத்தமிட்டதைப் பார்த்ததால், “நீ போற பாஸ்டுக்கு, உங்களுக்கு பிள்ளை பொறக்க போகுது, அதுக்குத் தான் மயக்கம் போட்டு விழுந்தன்னு நினைச்சேன்! சினிமால மாதிரி யாராச்சும் திடீர்னு இங்கே வந்து உன் மணிக்கட்டைப் புடிச்சுப் பார்த்துட்டு, வாழ்த்துக்கள் நீங்க தாயாகப் போறீங்கன்னு உன்கிட்ட சொல்வாங்களோன்னு லைட்டா பயந்துட்டேன்!” என்றாள் கிண்டலாக. அவளை அடிப்பது போல் பாவ்லா செய்துவிட்டு அவள் தோளில் கையைப் போட்டுக் கொண்டே வகுப்புக்கு நடந்து சென்றாள் ரம்யா.

அவள் மயங்கி விழுந்த கதை கல்லூரிக்குள் பரவி விடவே, டிபார்ட்மெண்டில் இருந்து ஒரு அறிவிப்பு வருகிறது. அனைவரும் தேர்வுக்கட்டணத்தை வகுப்பாசிரியையிடம் கொடுக்கும் படியும், அதை அவரே, வங்கிக் கிளையில் மொத்தமாக செலுத்தி விடுவார் என்றும் அறிவித்தனர். இந்த சம்பவத்தை அறிந்த தினேஷ், நன்றாக சாப்பிடாததால் அவன் அவளிடம் கோபம்  கொண்டது மட்டுமல்ல, உடனடியாக அவர் ஒரு உணவு அட்டவணையை  உருவாக்கி, அதில் உள்ளவாறு தினமும் சாப்பிட்டு அதை அந்த அட்டவணையில் பதிவு செய்ய வேண்டுமென்றான். ஒவ்வொரு மாதமும்  இந்த அட்டவணையை நிறைவு  செய்து அவனிடம்  கொடுக்கும்படி கண்டிப்புடன் சொன்னான். ரம்யாவும் அதைக் கண்டிப்பாக கடைபிடிக்க முயற்சி செய்கிறேன் என்று அவனிடம் சொன்னாள். “ப்ளீஸ்மா, நீ நல்லா இருந்தாத்தான் என்னை நீ நல்லாப் பார்த்துப்ப!” என்று அவன் சொல்லவும், ஒழுங்கா உன் டயட் சார்ட் படி சாப்புடுறேன் தினேஷ் என்று வாக்களித்தாள்.

 

ரம்யா, தினேஷ் தங்கள்  எதிர்காலத்திற்கான ஒரு வீட்டைப் பற்றி ஒரு நாள் தொலைபேசியில் பேசியிருக்க, அவர்களின் எண்ணங்களின் படியும் இருவரின் கற்பனைக்கேற்ப வீட்டுத் திட்டத்தை தினேஷ் உருவாக்கினான். அவர்கள் வீடு எப்படி இருக்க வேண்டும் என்று இருவரும் யோசித்து வைத்திருந்ததைத் தான் மிக நேர்த்தியாக வரைந்திருந்தான். 

This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.

6 comments

  • சில சமயங்களில் ரத்த உறவில்லா உடன்பிறக்காத சகோதர சகோதரிகள் பெரும்பாசக்காரர்களாய் கல்லூரியில் கிடைப்பார்கள் :-) நன்றி தோழி
  • Cho pavam Ranjan...but own brother pole nalla care edukuraru 👍 veedu katta planning ellam amogama pogudhu pole 😁😜 nice update ma'am 👏👏👏👏👏<br />Ethanai kalam than ivanga ippadi hide n seek game adittu iruka poranga....aunty kk matter therinja Saroja saman nikalo....than :grin: <br /><br />Thank you

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.