(Reading time: 10 - 20 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.

சுற்றுச்சுவர், மரங்கள், செடிகொடிகள், செங்கல் கட்டிடம், வீட்டின் நடுவில் வெளிச்சம் நன்கு வருமாறு உயர்கூரை, ஹால், ஒரு படுக்கையறை, சமையலறை, ஜன்னலை ஒட்டியவாறு ஒரு திண்ணை, புத்தகம் படிக்கலாம், செடிகளைப் பார்க்கலாம்,மாடியில் பால்கனியில் ஊஞ்சல், புத்தகங்கள், பொம்மைகள் நிறைந்து அவர்களின் குழந்தைகளுக்கா அறை. மேலே மாடியில் ஒரு கல் பெஞ்ச், அமர்ந்தோ படுத்தோ வானத்தைப் பார்க்க,நிலவையும், நட்சத்திரக் கூட்டத்தையும், மேகத்தையும், மழையையும் ரசிக்க, அதன் அருகில் பறவைகளுக்கு நீர் அருந்த ஒரு நீருற்று, மேல்நிலைத் தொட்டி. எளிமையான அழகான வீடு. இவ்வளவு கற்பனைகளை அவன் பிளான் வடிவில் வரைந்து, அதை ரம்யாவிடம் கொடுக்க, அவள் அதைத் தனது புத்தகத்தில் வைத்தாள்.. வீட்டில் அந்த புத்தகத்தைப் பிரிக்கையில், அந்த வீட்டுப் ப்ளான் வரைபடம்  புத்தகத்திலிருந்து கீழே விழவும், அம்மா அதைக் கையிலெடுத்துப் பார்த்து என்னது இது யார் வீட்டுப் ப்ளான் இது என்று கேட்கவும், ரம்யா அது அவளின்  கனவு வீட்டின் திட்டம்  என்று சொன்னாள். அந்த பிளானைக் கூர்ந்து பார்த்த  அம்மா, ரம்யா உன்  கனவு ரொம்பப் பெரியது,நீ நினைப்பது போல் நடக்குமா? என வியந்தார். ஆமாம்மா, பெரிய கனவு தான், ஆனால் நிச்சயம் அது பலிக்கும், அதற்காக எவ்வளவு என்னால் முடியுமோ அவ்வளவு முயற்சி செய்வேன் என்றாள்..

மூன்றாம் வருடத்தில் இருந்தே கல்லூரியில், வேலைவாய்ப்புக்குத் தயாராகும் பயிற்சித் திட்டங்களை அறிவிக்கிறார்கள். கல்லூரியில் சில பட்டயப் படிப்புகளையும் அறிவிக்க, அது சம்பந்தமான விவரங்கள் சேகரிக்க, நெட்வொர்க் இஞ்சினியரிங் துறையில் இருந்த பேராசிரியரைச் சந்தித்து விட்டு வந்த ரம்யாவை, வழியில் சந்தித்த ரஞ்சன் அவள் அருகில் நடந்தவாறே பேச ஆரம்பித்தான், “ரம்யா நீ தப்பா நினைக்கலைன்னா உன்கிட்ட ஒண்ணு கேட்கலாமா?”

கேளேன் அண்ணா! என்றவளிடம்

நீ தினேஷ சீரியஸா லவ் பண்றியா? ரஞ்சன் கேட்கவும்

ஒரு நொடி நின்று நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், “அதென்ன சீரியஸான்னு ஒரு கேள்வி? அவன்கூட தான் என்னோட லைப்னு டிசைட் பண்ணித்தான் அவனை லவ் பண்றேன். அப்புறம் என்ன விளையாட்டுக்கா லவ் பண்றோம்?” என்றாள்.

நீ சின்சியரா லவ் பண்றது சந்தோஷம். எப்பவும் இது மாதிரியே இரு. நீ என்னிக்கும் மாறிடாத! என்கிறான்.

ஏன் அண்ணா இப்படிலாம் பேசுற என்றவளிடம், “இது வரைக்கும் இங்கே கல்லூரியில் யார்கிட்டயும் சொல்லாத ஒரு விஷயத்தை உன்கிட்ட சொல்றேன், நீயும் இதைப் பற்றி வேறு யாரிடமும் சொல்லிராத!” என்றவன்  அவளுடன்  நடந்து கொண்டே தன் கதையைச் சொல்லத்

This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.

6 comments

  • சில சமயங்களில் ரத்த உறவில்லா உடன்பிறக்காத சகோதர சகோதரிகள் பெரும்பாசக்காரர்களாய் கல்லூரியில் கிடைப்பார்கள் :-) நன்றி தோழி
  • Cho pavam Ranjan...but own brother pole nalla care edukuraru 👍 veedu katta planning ellam amogama pogudhu pole 😁😜 nice update ma'am 👏👏👏👏👏<br />Ethanai kalam than ivanga ippadi hide n seek game adittu iruka poranga....aunty kk matter therinja Saroja saman nikalo....than :grin: <br /><br />Thank you

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.