(Reading time: 10 - 20 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.

தொடங்கினான்.  “என் அம்மா, அப்பாவுக்கு நான் ஒரே பையன் என்பதால் ரொம்பவே செல்லம். அப்பா எலெக்ட்ரிசிட்டி போர்டுல சீனியர் இஞ்சினியர். அதனால் நானும் ஒரு இஞ்சினியர் ஆகணும்னு அப்பா ஆசைப்பட்டார். என் மனசில அதைப் பதிய வச்சு நானும் நல்லபடியாகப் படிச்சிட்டு ஒழுங்காவே இருந்தேன். எல்லாம் அந்த ப்ரியாவைப் பார்க்கும் வரை.  ப்ளஸ் 2 ல அரையாண்டுத் தேர்வு விடுமுறை நேரம், ஸ்பெஷல் கிளாஸ் நடக்கும். எங்க பக்கத்து வீட்டுக்குத் துபாயில் இருந்து சொந்தகாரங்க வந்திருந்தாங்க. அதுல துறுதுறுனு இருந்தாள் ப்ரியா. எங்க வீட்ல வந்து வீடியோ கேம்ஸ் விளையாடுவா. என்னோட நாய்க்குட்டிய அவளுக்குப் பிடிச்சது. முதலில் ஒருவரை ஒருவர் பார்க்க மட்டும் செஞ்ச நாங்க, போனில் பேச ஆரம்பிச்சோம். என்னை ரொம்பப் புடிச்சிருக்குன்னு சொன்னா. எனக்கும் அவளைப் புடிச்சது. அடிக்கடி போனில் பேச, வீட்டில காசு எடுக்க ஆரம்பிச்சேன். அப்பா கண்டுக்கல. ஒரு நாள் நைட்டு, எங்க வீட்டுச் சாவியை எடுத்துத் திறந்து, காம்பவுண்ட் வால் தாண்டிப் போய் ரோட் சைட்ல ஒரு  எஸ்.டி.டி. பூத்ல போய் நின்னு போன் பேசிட்டு இருந்தேன். ஷிப்ட் முடிச்சிட்டு வண்டில போயிடுட்டு இருந்த அப்பா அதைப் பார்த்துட்டாங்க. இன்னொரு நாள், பணம் எடுக்க பீரோ  சாவியைத் திருட்டுத்தனமாக நான் எடுத்தபோது அம்மா, கையும் களவுமாப் பிடிச்சிட்டாங்க. இதெல்லாம் வேண்டாம் ரஞ்சன்னு அப்பா என்கிட்டே சொன்னாங்க. நான் கேட்கல, அவளுக்கு க்ரீடிங் கார்ட், கிப்ட்னு தேடித் தேடி வாங்கிட்டு, பரீட்சைக்கு சரியாகவேப் படிக்கல. அவ ஊருக்குக் கிளம்பிட்டா. அந்த சோகத்துல, ரிவிசன் டெஸ்ட் கூட சரியாய் எழுதல. கடைசில பப்ளிக் எக்ஸாம்லையும் நான் எடுத்த மதிப்பெண்கள் குறைவு. அம்மாவும் அப்பாவும் என்கூட பேசறத நிறுத்திட்டாங்க. திரும்ப டுடோரியல் சேர்ந்து இம்ப்ரூவ்மென்ட் எக்ஸாம்ஸ் எழுதினேன். இந்த காலேஜ்ல இன்ஜினியரிங் சீட் கிடைச்சது. சேர்ந்துட்டேன். முதல் நாள் நான் கிளாசுக்குள் வர்றப்போ நீங்க எல்லாரும் என்னை லெக்சரர்னு நினைச்சு எழுந்து நின்னது கூட எனக்கு நினைவிருக்கு. என் படிப்பு, அம்மா அப்பாவின் அன்புக்கு, நம்பிக்கைக்குன்னு  எல்லாத்துக்கும் தடையா வந்தது காதல் தான். அதிலும் அது உண்மையானதா இருந்தா பரவாயில்லை. வெறும் ஈர்ப்புதான் அவளைப் பொறுத்தமட்டில, எனக்கு மதிப்பெண்கள் குறைவு, நான் ஒரு பெயிலியர்னு முடிவு பண்ணவ, மறுவருடம் வந்தப்போ என்னைத் துளி கூட கண்டுக்கல. எது எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்ததுன்னா, நல்ல மதிப்பெண் எடுத்து அப்போதே இன்ஜினியரிங் முதல் ஆண்டு படிசிட்டுருந்த என் நண்பன் என்கிட்டே சொன்ன வார்த்தைகள் தான், “அந்த துபாய் பொண்ணு ப்ரியா இல்ல மச்சி, என்னையே பார்க்குறா, எதாச்சும் கிப்ட் வாங்கிக் கொடுத்து ப்ரொபோஸ் பண்ணப்போறேன்னு! சொன்னான். நான் காதலில் உண்மையாக இருந்த அளவு அவள் துளியும் இல்லை. அந்த நொடியோட நான் அவளின்  நினைவுகளைத்

This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.

6 comments

  • சில சமயங்களில் ரத்த உறவில்லா உடன்பிறக்காத சகோதர சகோதரிகள் பெரும்பாசக்காரர்களாய் கல்லூரியில் கிடைப்பார்கள் :-) நன்றி தோழி
  • Cho pavam Ranjan...but own brother pole nalla care edukuraru 👍 veedu katta planning ellam amogama pogudhu pole 😁😜 nice update ma'am 👏👏👏👏👏<br />Ethanai kalam than ivanga ippadi hide n seek game adittu iruka poranga....aunty kk matter therinja Saroja saman nikalo....than :grin: <br /><br />Thank you

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.