(Reading time: 5 - 9 minutes)
Thoora theriyum megam
Thoora theriyum megam

தொடர்கதை - தூரத் தெரியும் மேகம் - 24 - முகில் தினகரன்

ரு மாதத்திற்குப் பிறகு, மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பிய அர்ச்சனாவின் முகத்திலும், கழுத்துப் பகுதியிலும் இருந்த கோரமான செந்தழும்புகளைப் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் வடித்தனர் அவளைப் பெற்றவர்கள்.

“இந்தப் பொண்ணு சின்னக் குழந்தையா இருந்தப்ப இவ அழகுக்காகவே பக்கத்து வீட்டுக்காரங்க வந்து வந்து தூக்கிட்டுப் போவாங்களே!...இப்ப அந்த அழகு இல்லாமலே போயிடுச்சே!...நாங்க யாருக்கு என்ன பாவம் செய்தோம்?...எங்களுக்கு மட்டும் ஏன் இந்தக் கொடுமையான சோதனை!?” என்று அழுது புலம்பிய பார்வதியை தன்னால் இயன்ற அளவிற்குச் சமாதானப் படுத்தினாள் சம்பூர்ணம்.

சந்தோஷத் தீவாய் மாறியிருந்த அந்தக் குடியிருப்பு மறுபடியும் சோகக் குன்றாய் மாறிப் போனது.

அர்ச்சனா கொடுத்திருந்த வாக்கு மூலத்தின் அடிப்படையில், அந்த “துருவா டிரேடிங் கம்பெனி”யின் முதலாளி கைது செய்யப்பட,

அந்த நிறுவனமும் போலித் தயாரிப்புக்களை விற்பனை செய்த காரணத்திற்காய் சீல் வைக்கப்பட்டது.

தழும்புகளோடு வெளியே செல்லத் தயங்கி, தான் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தால் தன்னுடைய தன்னம்பிக்கை சிதைந்து போய் விடுவதோடு, சுரேஷும் தனியாளாய் பிசினஸை நடத்த முடியாமல் நொடிந்து போய் விடுவான் என்பதை உணர்ந்த அர்ச்சனா, மீண்டும் அலுவலகம் முடிவெடுத்தாள்.

“எப்படிம்மா?...இந்தக் கோலத்துல...அதுவும் ஒரு பக்கத்து முகத்தை துப்பட்டா போட்டு மூடிக் கொண்டு போய் வருவது உனக்கு சிரமம்தானே?...வேண்டாம் அந்த வேலையை விட்டுடும்மா!...நீ வீட்டோட சந்தோஷமா இரு...அதுவே போதும் எங்களுக்கு!அந்த சுரேஷ்கிட்ட நாங்க சொல்லிக்கறோம்!” என்று பார்வதியும், தேவநாதனும் அவளுக்கு பாசத்தடை போட,

“இல்லைம்மா...நான் வீட்டோட இருந்தாத்தான் என் மனசு சங்கடப்படும்!...வேதனைப்படும்!...என்னோட பழைய வாழ்க்கைக்கு நான் திரும்பிட்டா...எல்லாமே மறந்து போயிடும்மா!”

“அழகுப் பதுமையா அந்த அலுவலகத்தில் அமர்ந்திருந்த நீ...இப்படியொரு கோலத்துல அதே அலுவலகத்துல அமரும் போது உன் மனசு ரொம்ப வலிக்கும்மா!” தேவநாதன் கெஞ்சினார்.

“ஹா...ஹா...ஹா..”என்று வாய் விட்டுச் சிரித்த அர்ச்சனா, “அம்மா...இரண்டு கால்களோடு பீடு நடை போட்டுக்கிட்டிருந்த சுரேஷ் ஒரு காலை இழந்ததும்...சுணங்கிப் போய் விட்டாரா?....செயற்கைக் காலை பொருத்திக் கொண்டு முன்னை விட அதிகமா உழைக்கலையா?...தன்னம்பிக்கையோடு பிசினஸை ஆரம்பிச்சு...குறுகிய காலத்திலேயே ஒரு பெரிய லெவலுக்கு அதைக் கொண்டு போகலையா?...நான் என்ன அவரை மாதிரி அங்கஹீனமாகவா ஆயிட்டேன்!...மேல் தோல் கருகினதுல லேசா அங்கங்கே தழும்புகள் வந்திருக்கு...அவ்வளவுதானே?...அந்த தழும்புகளுக்காக நான் என் வாழ்க்கையையே முடக்கிக் கொள்ளணுமா?...சொல்லுங்கப்பா?”

“அதுக்குச் சொல்லலைம்மா...வெளிய தெருவுல யாராவது உன்னைப் பார்த்துக் கேலி பேசிட்டா...அது

7 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.