(Reading time: 13 - 25 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 25 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.

திருமண மண்டபத்தின் வரவேற்பிலேயே ரம்யாவின் வீடு இருக்கும் தெருவில் வசிக்கும் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார், “என்ன பாப்பா? நீ இங்கே? தெரிஞ்சவங்களா!” எனவும், கல்லூரியில் உடன் பயிலும் மாணவரின் அண்ணன் திருமணம் என்பதால் வந்தேன் என்று பதில் சொல்லிவிட்டு அவரின் அடுத்த கேள்விக்கு இடம் கொடுக்காமல் உள்ளே நுழைந்தாள். தெரிந்த முகங்களைத் தேட, தூரத்தில் இருந்து தினேஷ் அவளைப் பார்த்துப் புருவம் உயர்த்தி மறுவினாடியே புன்னகைத்தான். தினேஷின் வகுப்புத் தோழி ஜோதியைக் கண்டவள், அவளிடம் சென்று அமர்ந்தாள். சூப்பரா இருக்க ரம்யா! அழகா இருக்கு இந்த டிரஸ் உனக்கு என்றாள் ஜோதி. தேங்க்ஸ் பா! என்றவளிடம், வேற யாரும் வரலியா என்று கேட்டாள். பசங்கள்ள நிறைய பேர் வந்திருக்காங்க. பொண்ணுங்க சில பேர் வரேன்னு சொன்னாங்க, ஆனால் யாரையும் காணோம் என்றாள். திருமணம் நல்ல படியாக நடந்து முடிந்தது. ரம்யாவும் ஜோதியும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, பந்தியில் ஒருவர், நீங்க என்று கையை நீட்டியபடியே ஒரு விநாடி நிறுத்தியவர் “என்ன வேணும்?” என்று கேட்க, ஜோதி வேகமாக நாங்க தினேஷ் கிளாஸ்மேட்ஸ் என்றாள். அவர் சிரித்தவாறே, இல்லம்மா உங்களுக்கு சாப்பிட வேற எதாச்சும் வேணுமான்னு கேட்டேன்.உங்களுக்குப் பரிமாறச் சொல்றதுக்கு என்றவர் எது வேணும்னாலும் கூச்சப்படாமல் கேட்டு  நல்லா சாப்பிடுங்க, இது உங்க வீட்டுக் கல்யாணம் என்று அவர் சொல்லிவிட்டு நகரவும், ஜோதி சிரித்தவாறே, உங்க வீட்டுக் கல்யாணம் தானே ரம்யா என்றாள். ரம்யாவும் சிரித்தாள். வாங்கி வந்த பரிசை மணமக்களிடம் கொடுத்த பின்னர், தினேஷின் கல்லூரித் தோழர்களுடன் ஒரு புகைப்படம் எடுக்கலாம் என்று அவர்கள் அனைவரும் சேர்ந்து நின்றனர். ராபினும் இருந்தான். நடத்து நடத்து என்பது போல் அவன் பார்வை. தினேஷின் நண்பன் ஒருவன் கிண்டலாக, இங்கே யார் புதுசாக் கல்யாணம் ஆனவங்க என்றே தெரியல என மெல்லிய குரலில் சொல்ல, அவனைப் பார்த்து உஷ் என்றான் தினேஷ். புகைப்படம் எடுத்தபின், தினேஷிடமும் அவன் சித்தியிடமும் சொல்லிக் கொண்டு மண்டபத்தில் இருந்து கிளம்பினாள். ஜோதி அவளிடம், ஏன் இப்போவே சேர்ந்து போட்டோலாம் எடுக்கறீங்க, யார் கண்ணிலாவது மாட்டினால் பிரச்சினை தானே? என்றாள். ஒரு பிரச்சினையும் வராது ஜோதி என்று பதில் சொன்னாள் ரம்யா, தனக்கு வரப்போகும் பிரச்சினையின் தீவிரம் தெரியாமல். ஜோதி மண்டபத்தில் இருந்து வெளியேறி, பேருந்து நிறுத்தத்திற்குச் செல்ல, ரம்யா வீட்டுக்குச் செல்லும் திக்கில் திரும்பினாள். மண்டபத்தின் எதிர்முனையில் உள்ள கடைகளில் ஒன்றில் நின்றிருந்த அவளின் சித்தப்பா, ரம்யா மட்டும் எப்படி இங்கே வந்தாள்? ஏன் இங்கிருந்து தனியே போகிறாள், குடும்பத்தார் துணையில்லாமல் வருமளவு இங்கு நடந்தது யாரின் கல்யாணம், எந்த ஊர் என்னவென்று அக்கம்பக்கத்தில் 

This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.

4 comments

  • :thnkx: தோழி! அதன் போக்கில் போக விட்டு பிடிப்பது என பெற்றோர், பிள்ளைகள் என்று இரு பக்கமும் இருக்கிறார்கள். காதல் வெல்லும்
  • Good decision!! Veetula irukuravangalukku therinjadhum nalladhu :yes: padichi oru nalla nilaikku vandhalum ivanga parents accept panuvangala doubt than but appo ena agumnu wait pani parkalam :yes: hope we can expect some smart move from both of them... interesting update ma'am 👏👏👏👏👏👏<br />Thank you.
  • facepalm :sad: epi. :Q: enna panna porangalo theriyavillai.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.