(Reading time: 8 - 15 minutes)
Karuppu vellai vaanavil
Karuppu vellai vaanavil

விழிவிரிய பார்த்தவள் “உனக்கெப்படி?”

“என்னோட எய்த் சென்ஸ்ல கண்டுபிடிச்சேன்” கண்சிமிட்டி விளையாட்டாக கூற

பெரிதாக சிரித்தவள் “நீ சரியான கில்லாடி …. எனிவே தேங்க்ஸ் . . நாளைக்கு போன் பண்றேன் . . பை” என்றுவிட்டு சென்றுவிட்டாள்.

அதன் பிறகு கால் போன போக்கில் நடந்தான். என்ன செய்வதென்று தெரியவில்லை. சுற்றிலும் பலர் கை கோர்த்து ஜோடி ஜோடியாக சென்று இவனை வெறுப்பேற்றினார்கள். “ இதை பாக்கவா ப்ரோ என்னை இழுத்துட்டு வந்த?   நீ ஜாலியா இருக்க . . நான் இங்க ம்ம்” என தனுஷை செல்லமாய் கோபித்துக் கொண்டான்.

சாகர் மற்றும் சௌமியாவை மறந்தே போனான். இதுதான் சஞ்சய்,  அடுத்த கட்டத்திற்கு உடனே செல்லும் மனோபாவம். எதையும் மனதில் போட்டு  குழப்பிக் கொள்ளாதவன்.

எதிரே அழகான இளம் பெண் நடந்து வந்தாள்.  பச்சை லென்ஸ் கண்கள்.  வழவழப்பான லிப்கிளாஸ் உதடுகள். அவள் உடலோடு அப்பிய ஜீன்ஸ் பேண்ட் மற்றும் லவ் மீ என்ற ஆங்கில வார்த்தைகள் அடங்கிய டி ஷர்ட்டும்.

அவள் பதினெட்டு அகவையை தாண்டாதவள் எனச் சொன்னது. அவன் வயதிற்கே உரிய ஹார்மோன்கள் அவளை ரசிக்க வைத்தது.

“நீ தானே இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி காணாமல் போன என் அண்ணன் . . அண்ணா நான்தான் உன் தங்கை” அசரீரியாய் அருகில் இருந்து தியேட்டர் உள்ளிருந்து வசனம் காதில் விழ . . . “ எனக்கு ரஸ்க் கூட ரிஸ்க் தான் . . ” தன்னுள் புன்னகைத்தபடி நடக்கலானான்.

“நமக்குனு ஒரு ஆலியா பட் இல்லாமலா போக போறா” என இதயத்தை தட்டி சமாதானம் செய்து கொண்டான்.

அடுத்த ஒரு மணி நேரம் இப்படியே சுற்றியபின் பிருந்தா போன் செய்து சாப்பிட அழைத்தாள். “இல்ல அண்ணி நீங்க சாப்பிடுங்க . . நான் இங்க” என முடிக்கும் முன் “டேய் ஒழுங்கா சாப்பிட வா” என தனுஷ் கட்டளை இட . . . வேறுவழியின்றி சென்றான்.

சென்றதும் தனுஷ் கேட்ட முதல் கேள்வி “சௌமியா எங்க?”

என்னவென்று இவன் சொல்வது “தெரியலையே” என்றான் மெனு கார்டில் கண்ணை கொடுத்து.

பிருந்தா வாஷ் ரூம் நோக்கி போனாள்.

“உன்ன நம்பிதானே அனுப்பினேன்” மீண்டும் தனுஷ்

ஆச்சரியமாய் “ என்னை நம்பியா? இது என்ன புது கதை . . சௌமியா பிரெண்ட்ஸ் மீட் பண்ணனும் சொன்னா . .   அந்த பொண்ணு என்ன குழந்தையா . . போன் பண்ணு ப்ரோ”

6 comments

• Sowmi engaged
Ha ha sanjay
Yara parthalum thangai ya thonude
Adana namaku oru aliya pat ila mala poiduva
Thatha kelapuraru putala parpom
• Thath's periya rules ramanujama iruparu pole irukke 😈😈 puyalaaa :eek:
Nanga than free ya match seithu kuduthome ninga ethukku andha Sagar lunch paninga steam idhula ivanga nayana nadagathai parthu engala mathiri BD yosikuranga parunga :D Andha timing la vandha 25yrs dialogue semma 😁😁😁 interesting updte sis 👏👏👏👏👏👏👏 look forward to see what happens next.
Thank you.
• Superb episode :hatsoff:
Thatha solvathu Enna? Aahaa adutha problem oda
manushan ready :yes:
Dhanush eppaddi face Panna porar?
Sanjay ku Jodi Yaar .. so sad
Eagerly waiting for next episode
• Nice update😇😇😇. Na sanjay ku jodi sowmi nu ninachen🙃🙃🙃🙃🙃 mm so sad 😞😞😞 it's ok next enna :Q: waiting for your next episode😇😇😇😇 :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.