(Reading time: 7 - 13 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

ரொம்ப பயம்! அதான் இந்த விஷயம் உன்கிட்ட சொல்லல இத்தனை நாளா! ஆனால் இப்போ நாம கல்யாணம் செஞ்சுக்கப் போறோம். நாம தான் மேட் பார் ஈச் அதர்னு வாழனும் இல்லியா! தினேஷ் தயங்கியவாறே பேசி முடிக்கவும், ரம்யா புன்சிரிப்புடனே இருந்தாள்.

இந்த விஷயத்தை சொன்னால் ஒன்னு நீ என்மேல் கோபப் படுவேன்னு எதிர்ப்பார்த்தேன், எப்படி என்னை விட்டு ஒரு நிமிஷம் அந்த பொண்ணைப் பார்க்கலாம்னு நினைச்சேன்னு கேட்பேன்னு , இல்லாட்டி வருத்தப்பட்டு சோகமா ஆகிடுவன்னு நினைச்சேன், ரெண்டுமில்லாமல் நீ என்னடான்னா சிரிக்கிற என்றான்.

உனக்குத் தெரியுமா தினேஷ், அன்னிக்கு அந்த ஷேர் ஆட்டோல தான் நானும் இருந்தேன்.

நீயும் இருந்தியா?

ஆமாண்டா, அந்த புக் படிச்ச பொண்ணே நான் தான்.

உண்மையில் அது எந்த சப்ஜெக்ட் புக்கோ எதுவும் கிடையாது. அது ஒரு காமிக்ஸ். பொதுவாகவே எனக்கு காமிக்ஸ் புக்ஸ் ரொம்பப் புடிக்கும். சரித்திர நாவல்களும் பிடிக்கும். எனக்கு ரொம்பப் பிடிச்ச நாவல் பொன்னியின் செல்வன்.அதையே படக்கதைப் புத்தகமாகப் புதிதாகப் போட்டிருந்தாங்க.  காலேஜுக்கு ஒரு அசைன்மென்ட் சப்மிட் பண்ண வர வேண்டியிருக்குன்னு சீக்கிரம் கிளம்பினேன். வர்ற வழியில் என் தம்பி கையில் அந்த காமிக்ஸ் புக் இருக்கவும் அதை வாங்கிட்டு அப்படியே பஸ்ல வாசிச்சிட்டு வந்தேன். பஸ்ல இருந்து இறங்கி ஆட்டோ ஏறினதும் கூட அந்த புக்கை வாசிச்சிட்டு வந்தேன். அப்போ தான் அந்த பாரினர்ஸ் ஏறினாங்க. என்ன புக்குனு என்கிட்டயும் பேச்சுக் கொடுத்தாங்க. நான் எப்போ புக்ஸ் வாசிச்சாலும் வெளியுலகை மறந்து அதில் மூழ்கிடுவேன். அந்த பாரினர்ஸ் அப்புறம் என்கிட்டே எதுவும் பேசலன்னு  நினைவிருக்கு, ஆட்டோல நீ ஏறிட்டு இறங்கினதத் தான்  நான் கவனிக்கல. உன்னோட தலைவிதி அப்போதும் என்னைத் தான் உனக்குக் கை காட்டியிருக்கு. வேற யாரோ பொண்ணு இல்ல.!

நிஜமாவா! ரம்யா! அப்படின்னா எனக்கு ரொம்பவே சந்தோஷம்.

சத்தியமா நான்தாண்டா. உன்னைக் கவனிக்காமல் நான் இருந்தது என் தப்புத்தான். இல்லைனா, அப்போவே, அந்த பாரினர்ஸ் கிட்ட சண்டை போட்ருப்பேன். “ஏன் இந்த அழுக்குப் பையனை என்னைக் கல்யாணம் பண்ணிக்க சொல்லி தூண்டி விடுறீங்கன்னு?”ரம்யா சொல்லவும், தினேஷ் சிரித்தான். அந்த உரையாடல் சற்று அழுத்தத்தைத் தணிக்கவும், தங்கள் திருமண முடிவை பற்றி வீட்டில் சொல்லும் உறுதியோடு விடைபெற்றனர்.

 தினேஷ் தனது அண்ணன் ராஜேஷிடம் ரம்யாவை மணமுடிக்க தன் விருப்பத்தைச் சொல்ல, அவர் முடியாது என்றே மறுத்தார். ஊரில் ரம்யாவின் பாட்டி உடல்நலம் சரியில்லாமல்

4 comments

  • :thnkx: தோழி! ஜாதியைப் பிடிச்சிட்டே இருக்கவங்களை ஈஸியா மாத்த முடியாது. நல்ல முடிவுதான் எடுக்க போறாங்க :-)
  • மிக்க நன்றி தோழி :thnkx: ! நிச்சயமா நல்ல முடிவுதான் :-)
  • Andha auto girl Ramya vaga than irupanganu nininaithen 😍😍 that was cute..... Varusham odiyachi, patti ticket vangiyachi but ivanga parents pachai kodi kattalaye :o interesting flow ma'am 👏👏👏👏👏👏👏 <br />Ivanga ena decide pana poranganu padika waiting.<br />Thank you

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.