(Reading time: 7 - 13 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

இருந்தார். ரம்யா அவளின் திருமணப் பேச்சை எடுக்கவே முடியவில்லை. கடைசியில் பாட்டியின் இறுதி ஆசையான ரம்யாவின் திருமணத்தைக் காணும் விருப்பம் நிறைவேறாமலேயே அவரின் உயிர் பிரிந்தது.

துக்கம் நடந்த வீட்டில் உடனே ஒரு நல்லது நடத்தனும் என்று உறவினர்கள் ஆரம்பிக்க, அப்பாவும்  திரும்ப அவளின் ஜாதகம் பார்க்கும் படலத்தைத் தொடங்க நினைக்க, ரம்யா அப்பாவைத் தடுத்தவளாய், “அப்பா! நீங்க விரும்பியபடி என்னோட டிகிரிய முடிச்சிட்டேன்! வேலைக்கு சேர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆகிடுச்சு. அடுத்த வருடம் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு இருக்குப்பா. நீங்க திருமணப் பேச்சை எடுக்கிறதால சொல்றேன்,  இப்பவும் தினேஷை  மட்டும் தான் என் மனசுக்கு புடிச்சிருக்கு! ஜாதகம் எல்லாம் எதுவும் தேவையில்லப்பா! நீங்க அவன்கிட்ட எங்க திருமணத்தைப் பற்றிப் பேசுங்க!” என்றவளிடம் “வேலைக்குப் போய் பணம் சம்பாதிக்கிற திமிரா!” அவன் ஒண்ணும் நம்ம ஜாதியில்லையே. என் மருமகன் என் ஜாதிக்காரன் தான்!” என்றார் கோபமாக. அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியவில்லை ரம்யாவால். அம்மாவின் மனதையாவது கரைப்போம் என்றால், அம்மாவிற்கு அப்பாவின்  சொல்லே வேதவாக்கு.

“அம்மா எனக்கு தினேஷைக் கல்யாணம் பண்ணிக்க தான் விருப்பம். அப்படி இல்லைனா என் ஆயுசு முழுக்க இப்படியே உங்களோட பொண்ணாவே இருந்திர்றேன்!” என்றாள். அய்யயோ அப்படிலாம் சொல்லாத என்றார் அம்மா. உங்க அப்பா பேச்சை மீறி என்னால் எந்த முடிவும் எடுக்க முடியாதென்று அம்மாவும் அதே பிடியில் இருந்தார். நாட்களும், வாரங்களும், மாதங்களும், வருடங்களும் ஓட ஆரம்பித்தன.  அப்பாவின் ஜாதகத் தேடலும், பொருத்தங்களும் தொடர, எந்த வரணும் திருப்தியில்லை. டிப்ளமோ முடித்த ரகுவின் கல்லூரிப் படிப்புக்கான ஏற்பாடுகளில் அப்பா கவனம் செலுத்த, அம்மாவோ மகளுக்குத் திருமணம் கைகூடாத கவலையில் இருந்தார். அவளின் தோழி சத்யா திருமணமாகி முதல் குழந்தை பெற்றுவிட்டாள். ரம்யாவின் வகுப்புத் தோழிகள் பலருக்கும் திருமணம் முடிந்திருந்தது. எல்லாரும் குடும்பம் குழந்தை என்று தங்களின் விருப்பப்படி வாழ்வின் புதிய அத்தியாயயத்தைத் தொடங்க, தான் மட்டும் நின்ற இடத்திலேயே புள்ளியாய் நின்று கொண்டு இருப்பதாய்த் தோன்ற ஆரம்பித்தது ரம்யாவுக்கு. எதுவாயினும் இனி துணிந்து ஒரு முடிவெடுப்பது என்றெண்ணிய ரம்யா, அந்த ஞாயிறு தன்னை சந்திக்க ஹாஸ்டல் வாசலில் வந்து காத்திருக்குமாறு தினேஷிடம் போனில் சொன்னாள். 

This novel is available in Chillzee KiMo. To read the complete novel, please visit Chillzee KiMo.

தொடர்வேன்

Next episode will be published on 16th May. This series is updated weekly on Sunday mornings.

Go to Idho oru kadhal kathai - Pagam 2 story main page

4 comments

  • :thnkx: தோழி! ஜாதியைப் பிடிச்சிட்டே இருக்கவங்களை ஈஸியா மாத்த முடியாது. நல்ல முடிவுதான் எடுக்க போறாங்க :-)
  • மிக்க நன்றி தோழி :thnkx: ! நிச்சயமா நல்ல முடிவுதான் :-)
  • Andha auto girl Ramya vaga than irupanganu nininaithen 😍😍 that was cute..... Varusham odiyachi, patti ticket vangiyachi but ivanga parents pachai kodi kattalaye :o interesting flow ma'am 👏👏👏👏👏👏👏 <br />Ivanga ena decide pana poranganu padika waiting.<br />Thank you

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.