(Reading time: 8 - 16 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

தொடர்கதை - காண்போமே என்னாளும் திருநாள் - 26 - முகில் தினகரன்

ன்று இரவு வீடு திரும்பியதும் முதல் வேலையாக ரவீந்தருக்கு கால் செய்தார் சுதாகர்ஜி.

“என்ன ஜீ...எப்படிப் போயிட்டிருக்கு?” ஜாலியாகக் கேட்டான் ரவீந்தர்.

“ம்ம்ம்...மண்டையைப் பிச்சுக்கலாம் போல போயிட்டிருக்கு” கடுப்படித்தார் சுதாகர்ஜி.

“வாட் ஜீ?..எனி பிராப்ளம்?”

“அதிருக்கட்டும்..இப்ப நீ எங்கிருக்கே?” சுதாகர்ஜி கேட்டார்.

“மதுரைல!...இன்னிக்கு மதியத்துக்கு மேலே கிளம்பி ஈவினிங் பொள்ளாச்சி வந்திடுவேன்!...”

“சரி...அங்கேயும் போய் உன் டிராமா வேலையைப் பண்ணிட்டிருக்கியா?” தன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளும் விதமாய் சுதாகர்ஜி கேட்க,

“அது செரி...எனக்கு கம்பெனி புராடெக்ட் மார்க்கெட்டிங் வேலையே மென்னியைத் திருகுது...இதுல எங்க போயி...அந்த டிராமா வேலையைப் பார்க்கறது?” ரவீந்தர் டென்ஷனாய்ச் சொன்னான்.

“அப்படின்னா...இங்க வந்திட்டுப் போனது யாரு?”

“ஜீ...என்ன சொல்றீங்க?...கொஞ்சம் தெளிவாய்ச் சொல்லுங்க” ரவீந்தரின் குரலில் லேசாய் அச்சம் கலந்திருந்தது.

“இன்னிக்கு...உடுமலைப்பேட்டையிலிருந்து...” என்று ஆரம்பித்து, அந்த சம்யுக்தாவிற்கு குணமானது...சஞ்சீவ் குமாரசாமி அஞ்சு கோடியை அள்ளி விசீயது..எல்லாத்தையும் விரிவாகச் சொல்லி முடித்தார்.

அமைதியாய் மொத்தத்தையும் கேட்டு முடித்த ரவீந்தருக்கு வாயடைத்துப் போனது.  அவனால் பதிலே பேச முடியவில்லை. “என்னங்க ஜீ...என்னென்னமோ சொல்றீங்க?...எல்லாம் சினிமால நடக்கற மாதிரியல்ல இருக்குது?” ரவீந்தரின் குரல் நடுங்கியது.

“என்ன ரவீந்தர்...என்ன பண்ணலாம் இப்ப?...அந்த சஞ்சீவ் குமாரசாமி வேற எங்க அறங்காவலரோட பழைய தோஸ்து!” சுதாகர்ஜி கேட்டார்.

“சில விஷயங்களைக் கண்டுக்காம விட்டுட்டா கச்சிதமாய்ப் போகும்!...சில விஷயங்களைக் கண்டுக்காம விட்டுட்டா கந்தலாய்ப் போகும்!”...எனக்கென்னமோ இந்த விஷயத்தை நாம கண்டுக்காமப் போனா...கச்சிதமாய் முடியும்!னு தோணுது!” என்றான் ரவீந்தர்.

“அப்ப அமைதியா வேடிக்கை பார்க்கலாம்!கறியா?”

“ஆமாம் ஜீ..நடப்பது நடக்கட்டும்!...எல்லாம் நன்மைக்கே!”

இணைப்பிலிருந்து வெளியேறியதும் ரவீந்தர் யோசித்தான்.  “எப்படி...எப்படி இது சாத்தியம்?...ஆரம்பத்துல நான் மயானப் புதருக்குள்ளார போய் விழுந்து கிடந்தது முதல் நாடகம்!...அதுக்குப் பிறகு கோயமுத்தூரிலிருந்து அந்த கோகுலை வரச் சொல்லிப் போட்டது

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.