(Reading time: 8 - 16 minutes)
Kaanpome ennaalum thirunaal
Kaanpome ennaalum thirunaal

“ஜீ...நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்...எனக்கு “டாட்டா” மட்டும் சொல்லுங்க நான் போயிட்டு வர்றேன்” என்றான் ரவீந்தர்.

“என்ன?...என்னப்பா சொல்றே?” சின்ன அதிர்வோடு கேட்டார் சுதாகர்ஜி.

“எனக்கு மறுபடியும் டிரான்ஸ்பர்!...இந்த முறை சென்னைக்கு” வருத்தாகவும் இல்லாமல், சந்தோஷமாகவும் இல்லாமல் சொன்னான் ரவீந்தர்.

“என்னப்பா...நீ இங்க வந்து...எத்தனை மாசமிருக்கும்?...ஒரு ஆறு மாசமிருக்குமா?” சுதாகர்ஜி கேட்க,

“நல்லாக் கேட்டீங்க போங்க!...சுத்தமா ஒன்றரை வருஷமாச்சு!...என்னை என்ன எதிர்பார்ப்போடு இங்க கொண்டு வந்தாங்களோ?...அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செஞ்சிட்டேன்... கடந்த எட்டு மாசமா கம்பெனி எனக்கு என்ன டார்கெட்டை ஃபிக்ஸ் பண்ணிச்சோ அந்த டார்கெட்டை முடிச்சு...அதுக்கு மேலேயே போயிட்டேன்!...ஸோ...இனி இங்க நான் இல்லேன்னாலும் அதுபாட்டுக்கு நடக்கும்!..அதனால அடுத்த வீக்கர் பாயிண்ட்டுக்கு போகச் சொல்லிட்டாங்க!....அதுக்காகத்தான் சென்னை நோக்கிப் பயணம்”என்றான் ரவீந்தர்.

சில நிமிடங்கள் அமைதியாயிருந்த சுதாகர்ஜி, “ரவீந்தர்..கடந்த ஒன்றரை வருஷத்துல...உன் மார்க்கெட்டிங் திறமைல நீ உங்க கம்பெனியோட டார்கெட்டை மட்டுமா உயர்த்தியிருக்கே?...எங்க கோயிலோட டார்கெட்டையும் அல்லவா உயர்த்தியிருக்கே?... உனக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலைப்பா” தழுதழுத்தார் சுதாகர்ஜி.  அவர் கண்களும் லேசாய்க் கலங்கியிருந்தன.

“என்ன ஜீ?...இதுக்குப் போய் கண் கலங்கிட்டு?..” சுதாகர்ஜியின் கைகளைப் பற்றிக் கொண்ட ரவீந்தர். “ஜீ....நான் ஒண்ணு சொல்றேன்...அதை நான் போன பிறகு நீங்க நிதானமாய் யோசிச்சுப் பாருங்க” பீடிகை போட்டான்.

“என்ன?”

“உங்க குல தெய்வமான உப்பாயம்மனின் திருவிளையாடல்களின் இதுவும் ஒண்ணு!...கோயமுத்தூரிலிருந்த என்னை பொள்ளாச்சிக்கு டிரான்ஸ்பர் பண்ணி...உங்களை என்னையும் சந்திக்க வெச்சு...என்னைப் பொய் நாடகம் போட வெச்சு...அதன் மூலமா என்னோட உண்மையான ரூபத்தை இந்த மக்களுக்குப் புரிய வெச்சிருக்கா!” உணர்ச்சிகரமாய்ச் சொன்னான் ரவீந்தர்.

தலையைச் சாய்த்தபடி, மேலே பார்த்துக் கொண்டு யோசித்த சுதாகர்ஜீ, “ஒரு வேளை அப்படியும் இருக்குமோ?”

“இருக்குமோ என்ன?...அதேதான்...”என்று கையை ஆட்டிச் சொன்ன ரவீந்தர், “நான் நாளைக்கு

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.