(Reading time: 4 - 8 minutes)
Neeyaga naan naanaga nee
Neeyaga naan naanaga nee

 

யோசித்தார். என்ன இது?...கடைசில எவனையுமே காணோம்?...லாயர் என்னமோ  ஜூனியரை அனுப்பியிருக்கேன் இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவார்!ன்னு சொன்னாரு...கடைசில அவரும் டபாய்ச்சிட்டாரு!...இப்ப என்ன பண்ணலாம்?...”

நேரம் 10.30.

டென்ஷனோடு அமர்ந்திருந்தார் சுப்ரமணியராஜா.

அவரது மொபைல் மெல்ல முணுமுணுத்ததுசலிப்புடன் எடுத்துப் பார்த்தார்ஒரு புதிய எண் அழைத்திருந்தது.

யாராயிருக்கும் இந்த நேரத்துல?”

குழப்பத்துடன் இணைப்பில் நுழைந்து “ஹலோ?” என்றார்.

ஹலோ...சார்..நான் லாயர் சுரேஷோட ஜூனியர் விவேக்!

 “அப்பாடா...இவன் ஒருத்தனாவது வந்தானே?” என்று சந்தோஷித்தபடி அட...என்னப்பா...சீக்கிரம் வாப்பா!...உனக்காக எத்தனை நேரம் வெய்ட் பண்றது?” கடுப்படித்தார்.

 “சார்...அது வந்து...என்னோட மிஸஸுக்கு இது டெலிவரி டைம்!...தனியா அவளை விட்டுட்டு என்னால வர முடியாது!...அதனால...ஒரு நாள் தள்ளி நாளைக்கு நம்ம புரோக்ராமை வெச்சுட்டா..பரவாயில்லை!...ஏன்னா நாளைக்கு என்னோட மாமியார் அவளுக்குத் துணைக்கு வந்துடுவாங்க!

ஏப்பா...நான் என்ன டூர் புரோக்ராமா ஏற்பாடு பண்ணியிருக்கேன்?...ஒரு நாள் தள்ளிக் கிளம்பறதுக்கு?” என்று சுப்ரமணியராஜா சொல்லச் சொல்ல

மறுமுனையில் அந்த ஜூனியர் லாயர் வேண்டுமென்றே “ஹல்லோ...ஹல்லோ..ஹல்லோஎன்று சிக்னல் கிடைக்காதவன் போல் கத்தி விட்டு

ச்சே...என்ன மொபைலோ...சிக்னலே கிடைக்க மாட்டேங்குதுஎன்று சுப்ரமணியராஜாவின் காதுக்குக் கேட்பது போலவே சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்துக் கொண்டார்.

எல்லோருமே சொல்லி வைத்தாற் போல் வேண்டுமென்றோ அல்லது அச்சத்தினாலோதான் அந்தக் காம்ப்ளக்ஸிற்கு வரத் தயங்குகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட சுப்ரமணியராஜா பெரும் கோபத்திற்குள்ளானார்.

நேரம் 11.00

இனி யாரையும் நம்பிப் பிரயோஜனமில்லை!...நாமே தனியா போய்ப் பார்த்துட வேண்டியதுதான்!

துணிந்தார் சுப்ரமணியராஜா.

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.