(Reading time: 5 - 9 minutes)
Neeyaga naan naanaga nee
Neeyaga naan naanaga nee

“ஓ.கே..ஓ.கே!...கண்டிப்பா வர்றேன்!” சொல்லி விட்டு ஏ.சி.எழ, சட்டென்று அந்த அறைக்குள் வந்து நின்றாள் ராதிகா.

“என்னம்மா...கிளம்பலாமா?”

“அதுக்கு முன்னாடி ஒரு சின்ன ஆப்ளிகேஷன்” என்றாள்.

எல்லோரும் நெற்றியைச் சுருக்கியபடி அவளையே பார்க்க

“வந்து….என்னோட முகிலன் இந்தக் காம்ப்ளக்ஸ்ல இறந்திருந்தாலும்...அவர் இன்னும் இங்கதான் வாழ்ந்திட்டிருக்கார்!ன்னு என்னோட மனசு சொல்லுது!...அதனால...எனக்கு அந்தக் கல்பனா பார்த்திட்டிருந்த அட்மினிஸ்ட்ரெஷன் மேனேஜர் வேலையை  எனக்குக் குடுத்தீங்கன்னா...ரொம்ப சந்தோஷப் படுவேன்!..ஆத்ம திருப்தியோட வேலை செய்வேன்!” என்றாள் அவள் கெஞ்சும் பார்வையுடன்.

ஏ.சி.தீனதயாள் உடனே “வெரி குட்!” என்று சொல்லி விட்டு சாம்பசிவத்தின் பக்கம் திரும்பி “சாம்பசிவம் சார்...நம்ம ராதிகா...எம்.பி.ஏ.படிச்சவ...கம்ப்யூட்டர்ல பூந்து வெளையாடுவா...ஐ திங்க் ஸீ ஈஸ் வெரி சூட்டபிள் ஃபார் தட் போஸ்ட்...”

முகம் வெளிறிப் போன சாம்பசிவம் முதலில் மறுப்பது போல் இட,வலமாய்த் தலையாட்டி விட்டு, பிறகு வேறு வழியில்லாமல் “சரி”யென்று தலையாட்டி வைத்தார்.

“ஓ...வெரி வெரி தேங்க்ஸ் சார்!” சொல்லிய ராதிகா ஏ.சி.யுடன் திரும்பி நடக்க ஆரம்பித்த

அதே விநாடியில்

விஸ்வா டவர்ஸ் காம்ப்ளக்ஸின் பின் புறமிருந்த அந்த சிறிய கார்டனில் புதிதாக நடப்பட்டிருந்த குரோட்டன் செடிகளின் அடியில் ஐந்தடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த கல்பனாவின் உயிரற்ற உடம்பிலிருந்து கிளம்பிய ஒரு வெளிச்சப்புள்ளி மண்ணைக் கீறி வெளியேறி காற்றில் புகை போல் கலந்து....மிதந்து...மிதந்து..மிதந்து...ராதிகாவில் உச்சந்தலையில் வந்தமர

சட்டென்று சிலிர்த்துக் கொண்ட ராதிகா நிதானமாகத் தலையைத் திருப்பி சாம்பசிவத்தைப் பார்த்து

“நாளைக்கே வந்து வேலைல ஜாய்ன் பண்ணிக்கறேன் சார்” என்றாள்....கல்பனாவின் குரலில்.

திகிலடித்துப் போனார் சாம்பசிவம்.  “இது...இது...அந்தக் கல்பனாவின் குரல் ஆச்சே?”. அவரது அடிவயிற்றில் ஒரு பய பந்து உருண்டது.  விழிகள் பீதி வாங்கி விறைத்தன.  கை,கால்கள் அவரையுமறியாமல் நடுங்கின.

திடீரென்று அவரது கால்கள் “கிடு...கிடு”வென்று நடுங்குவதின் அர்த்தம் புரியாமல் வியப்பிலாழ்ந்த நம்பூதிரி சட்டென்று திரும்பி ராதிகாவைப் பார்த்தார்.  அவர் கண்களுக்கு அங்கு ராதிகா மட்டும் தெரியவில்லை அவளை ஒட்டியவாறே புகைப்படலம் போல் நின்று

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.