(Reading time: 6 - 12 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

பிரச்சினையில்லை!...சரி பண்ணிடலாம்!...அதுக்காக நாம செய்ய வேண்டியது என்ன?ன்னா...வீட்டுல உங்க மகனோட போட்டோவுக்கு மாலை போட்டு வெச்சிருக்கீங்களா?” கேட்டார்.

“இல்லை டாக்டர்!...மகன் இறந்த பிறகு அவள் இருக்கும் நிலைமையைப் பார்த்து நான்தான்...அதை அவாய்ட் பண்ணிட்டேன்!...ஹால்ல போட்டோ இருக்கு...பட் மாலை போடாமல்தான் இருக்கு!” என்றார் சிங்கமுத்து.

“அதுதான் மிஸ்டேக்!...ஏற்கனவே அவங்க...தன்னோட மனசுல மகன் இன்னும் சாகலை!ன்னு பதிஞ்சு வெச்சிருக்காங்க!...அதற்கு ஏற்றார் போல் நீங்களும் மகன் போட்டோவுக்கு மாலை போடாம வெச்சிருக்கீங்க!...அது...அவங்க எண்ணத்தை இன்னும் உறுதிப்படுத்துமே?” என்ற டாக்டர், “நீங்க என்ன பண்றீங்க?...முதல் வேலையா...இன்னிக்கே போய் அந்த போட்டோவுக்கு ஒரு பெரிய மாலையைப் போட்டு...முடிஞ்சா ஒரு சின்ன லைட்டும் போட்டுடுங்க!...” என்றார்.

லேசாய்த் தயங்கிய சிங்கமுத்து, “டாக்டர் இதனால் வேற ஏதாவது பிரச்சினை வந்திடாதே?” என்று சொல்ல,

“வரும்...கண்டிப்பா வரும்!...அதை நாமதான் சமாளிக்கணும்!...திட மனசோட ஒரு தடவை சமாளிச்சிட்டா...அதற்கான மாற்றங்கள் நிச்சயம் இருக்கும்”

“ஓ.கே.டாக்டர்” அரை மனதுடன் சம்மதித்தார் சிங்கமுத்து.

“நெக்ஸ்ட்...நீங்க செய்ய வேண்டியது....உங்க மகன் இறந்தப்ப..நியூஸ் பேப்பர்ல கண்ணீர் அஞ்சலி விளம்பரமெல்லாம் குடுத்திருப்பீங்கல்ல?....அதையெல்லாம் எடுத்து அவங்க கண்ணுல படற மாதிரி டீப்பாய் மேலே பரப்பி வைங்க!”

“சரிங்க டாக்டர்”

“அடுத்தது..இந்த முரளியோட ஒரிஜினல் அம்மாவோட உங்க மனைவியைப் பேசிப் பழக விடுங்க!...அப்படிப் பேசிப் பழகும் போது முரளியை வளர்க்கத் தான் பட்ட கஷ்டங்களையெல்லாம் முரளியோட தாய் அவங்க கிட்ட சொல்லட்டும்!...அப்ப அவங்க மனசுல முரளி வேறு ஒருவருடைய மகன்..என்கிற தாக்கம் உண்டாகும்!...ஆக...முதல்ல இந்த மூன்று முறைகளை அப்ளை பண்ணிப் பார்ப்போம்...அனேகமா இந்த அப்ரோச்சிலேயே அவங்க சரியாயிடுவாங்க!...ஒருவேளை அப்படி சரியாகலைன்னா...வீ கோ ஃபார் அனதர் ட்ரீட்மெண்ட்” என்றார் டாக்டர்.

“அப்ப...நாங்க கிளம்பறோம் டாக்டர்” சிங்கமுத்துவும், முரளியும் எழுந்தனர்.

தொடரும்

Go to Kai kortha priyangal story main page

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.