(Reading time: 6 - 12 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

அந்த வழுக்கைத் தலை மனோதத்துவ மருத்துவர் தேவராஜின் மேசைக்கு எதிரே அமர்ந்திருந்தனர் டிரான்ஸ்போர்ட் முதலாளி சிங்கமுத்துவும், முரளியும்.

ஒரு நீண்ட யோசனைக்குப் பின், “மிஸ்டர் சிங்கமுத்து...உங்க மனைவி ஜெகதாம்பாள்...இறந்து போன தன் மகனோட சவத்தை.....கண்ணால் கூடப் பார்க்கவில்லை!ன்னு நீங்க சொல்றீங்க!...பட்...அதைக் கேட்கும் போது எனக்கு ரொம்பவே ஆச்சரியமாயிருக்கு!...ஏன்?...ஏன் அப்படி செஞ்சாங்க?”

“எப்பவுமே...கலகலப்பா...பேசிட்டும்...சிரிச்சுக்கிட்டும் இருந்த என்னோட மகனை பிணமாய்ப் பார்த்தால் என் மனசு தாங்காது!...நான் பார்க்க மாட்டேன்!...பார்க்க மாட்டேன்” கத்திக் கதறினாங்க!...நாங்க எல்லோருமே....“கொஞ்சம் நேரம்தான் அப்படி இருப்பாங்க...கடைசில சவத்தைத் தூக்கும் போது எப்படியும் வந்து பார்த்திடுவாங்க!”ன்னு நெனச்சோம்!...ஆனா கடைசி வரை என் மனைவி வரவேயில்லை!...சவத்தை ஹால்ல கிடத்தியிருந்தோம்...அவங்க ஹாலுக்கே வராமல் உள் அறையிலேயே...அவனோட போட்டோவைக் கையில் வெச்சுக்கிட்டு...அதைப் பார்த்துப் பார்த்தே அழுதாங்க!...” என்றார் சிங்கமுத்து கனத்த நெஞ்சுடன்.

“யெஸ்...தட் ஈஸ் த ரீஸன்!...மகனைப் பிணமாய்ப் பார்க்காததினால்...அவங்க மனசுல...மகன் எங்கேயோ வெளியூர் போயிருக்கான்!...எப்படியும் திரும்பி வந்திடுவான்!..என்கிற மாதிரியே கற்பனை பண்ணிட்டு இருந்திருக்காங்க!...அவங்க நெனைச்ச மாதிரியே அதே தோற்றத்துல இந்தப் பையனைப் பார்த்ததும்...தன் மகன் திரும்பி வந்திட்டான்!னு முடிவு பண்ணிட்டாங்க!...தட்ஸ் ஆல்” என்றார் டாக்டர் தேவராஜ்.

“திரும்பி வந்த தன் மகனாய் இவனை அவங்க நெனச்சிட்டதாலே...இவன் எங்க வீட்டிலேயே இருக்கணும்!னு எதிர்பார்க்கிறாங்க!...இந்தப் பையனும் அவங்க நிலைமையை உணர்ந்து...அதுக்கு சம்மதிச்சு எங்க வீட்டிலேயேதான் இருக்கான்!...இவனுக்கு ஒரு அம்மாவும்...தங்கச்சியும் இருக்காங்க!...அவங்களையும் நாங்க எங்க வீட்டு அவுட் ஹவுஸிலேயே தங்க வெச்சிட்டோம்!” என்று சிங்கமுத்து சொல்ல,

“குட்...சரியான முடிவு” என்றார் டாக்டர்.

“ஆனா...இப்ப பிரச்சினை என்ன?ன்னா....இவன் அவுட் ஹவுஸுக்குப் போய்...அம்மாவையும் தங்கச்சியையும் பார்த்துப் பேசறது...அவங்களுக்குப் பிடிக்கலை!.. “அங்க எதுக்குப் போறே?...அவங்க கூடவெல்லாம் எதுக்குப் பேசறே?”ன்னு இவனைக் கண்ட்ரோல் பண்றாங்க!...பாவம்...இந்தப் பையன் ரெண்டு பேருக்கும் நடுவில் மாட்டிக்கிட்டு முழிக்கறான்” என்றார் சிங்கமுத்து.

மெலிதாய்ச் சிரித்த டாக்டர், “பயப்படற அளவுக்கு இது ஒண்ணும் பெரிய

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.