(Reading time: 5 - 9 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 25 - முகில் தினகரன்

டிரான்ஸ்போர்ட் ஆபீஸில் மற்ற டிரைவர்களும் பேசி சிரித்துக் கொண்டே மதிய உணவை அருந்திக் கொண்டிருந்த தங்கவேலுவிடம் வந்த செக்யூரிட்டி, “தங்கவேலு அண்ணே!...உங்களைப் பார்க்க ஒரு பொண்ணு வந்திருக்கு” என்றார்.

  

“என்னைப் பார்க்க...பொண்ணா?” யோசித்தவர், “ம்ம்ம்...இன்னும் ரெண்டு நிமிஷத்துல கேட்டுக்கு வர்றேன்...” என்று சொல்ல,

  

செக்யூரிட்டி நகர்ந்தார்.

  

அவசர அவசரமாய் உணவை சாப்பிட்டு முடித்தவர், “யாராயிருக்கும்?” யோசித்தவாறே கேட்டிற்கு வந்தார்.

  

செக்யூரிட்டி அறைக்குள் உட்கார்ந்திருந்த அந்தப் பெண்ணிற்கு இருபத்திரெண்டு...இருபத்தி மூணு வயதிருக்கும்.  ஒல்லியான உடல்வாகு., ஆனால் முகத்தில் இயல்பாகவே ஒரு லட்சணம் இருந்தது.

  

“சொல்லும்மா...யாரு நீ?...எதுக்காக என்னைப் பார்க்க வந்தே?” தங்கவேலு கர்ச்சீப்பால் தன் வாயைத் துடைத்துக் கொண்டே கேட்டார்.

  

“அண்ணா...என் பேர் நித்யா...எனக்கு முரளி சாரை நல்லாத் தெரியும்...”என்று அவள் ஆரம்பிக்க,

  

“அடடே...நகைக்கடைல வேலை பார்த்த பொண்ணா நீ?..,உரளி உன்னைப் பத்தி சொல்லியிருக்கான்!...எங்க முதலாளி மகன் கோகுல்...உனக்கு பண உதவி செய்யப் போக...அவன் இறந்ததே தெரியாத நீ...அந்தப் பணத்தை முரளி கிட்ட குடுத்தியாமே?”

  

“ஆமாங்க அண்ணா....ரெண்டு பேரும் ஒரே உருவத்துல இருந்ததினால கொஞ்சம் கன்ஃப்யூஸ் ஆயிட்டேன்!...அதுக்கப்புறம் கோகுல் இறந்த விஷயத்தை முரளி சொன்ன போது உண்மையிலேயே கண் கலங்கி விட்டேன்!... “யாருன்னே தெரியாத எனக்கு பெரிய தொகையைத் தூக்கிக் குடுத்து என்னைஅந்த திடுட்டுக் குற்றத்திலிருந்து காப்பாற்றணும் என்கிற மனசு எத்தனை பேருக்கு இருக்கும்?!...அதே மாதிரி கோகுலுக்குச் சேர வேண்டிய

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.