(Reading time: 6 - 12 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

உங்களுக்குத் தெரியாதா?” கத்தினாள்.

  

“அப்படியாம்மா?...யாரைம்மா இவர் கொலை செஞ்சார்?” வசந்தி கேட்டாள்.

  

“அன்னிக்கு...தனசேகரை....”

  

“இப்பென்ன?...தனசேகர் செத்தா போயிட்டார்?...இல்லையே?...அப்புறம் எப்படி இவர் கொலைகாரர் ஆவார்?” வசந்தி சொல்ல,

  

“இருந்தாலும்...கத்தியால் குத்தியவன் தானே?”

  

“அது ஆத்திரத்துல குத்தியது...அவ்வளவுதான்” என்றாள் வசந்தி.

  

அப்போது மூச்சை ஆழமாய் உறிஞ்சிய ராக்கம்மா, “அடக் கடவுளே...தண்ணி வேற போட்டிருப்பான் போலிருக்கே?” என்றாள்.

  

“ஆமாம்மா...ஏக போதைல ரோட்டோரமாய்க் கிடந்தான்...வண்டிவாசிக போற ரோடு...எவனாவது லாரிக்காரன் அடிச்சுத் தூக்கிட்டுப் போயிட்டான்னா வம்பு!ன்னு நானும் வசந்தியும்...டி.வி.எஸ்-50ல வெச்சு இங்க தூக்கியாந்திட்டோம்” என்றான் முரளி.

  

“ஏண்டா...இது நமக்குத் தேவையாடா?” ராக்கம்மா சொல்ல,

  

“அம்மா...யாருன்னே தெரியாத ஒருத்தர் கண்ணுல கண்ணீர் வரும் போது, அதைப் பார்த்து இன்னொருவர் கண்ணில் கண்ணீர் வந்தா...அதுதான்மா மனித நேயம்!...எனக்கும் வசந்திக்கும் அந்த மனித நேயம் நிறைய இருக்கும்மா” என்றான் முரளி.

  

“என்னமோ பண்ணுங்க...போங்க!” வெறுப்போடு சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் ராக்கம்மா.

  

சற்று நேரத்தில் முரளியும், அவன் தாயாரும் கடைவீதி சென்று விட, வசந்தி மட்டும் வீட்டில் தனியே இருந்தாள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.