(Reading time: 6 - 12 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

தொடர்கதை - கை கோர்த்த பிரியங்கள்! - 26 - முகில் தினகரன்

காலம், வாய் பேசாது, ஆனால், இந்த உலகில் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கும் அதுதான் பதில் சொல்லும். அதே போல், எந்த நேரத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் தன் ஓட்டத்தைச் சற்றும் மாற்றிக் கொள்ளாமல் அது ஓடிக் கொண்டேயிருக்கும்.  அந்த ஓட்டத்தில் நாட்களும், வாரங்களும், மாதங்களும், வருடங்களும் அரைபட்டுக் கொண்டேதான் இருக்கும்.

  

மூன்று மாதங்களுக்குப் பிறகு,

  

முரளியும், அவன் தங்கை வசந்தியும் பக்கத்து ஊரில் நடைபெற்ற ஒரு திருமணத்திற்குச் சென்று விட்டு டி.வி.எஸ்-50யில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

  

 “ஏய்...வசந்தி...நான் கையை விட்டுட்டு ஓட்டி நீ பார்த்ததில்லை அல்ல?...இன்னிக்குப் பாரு” சொல்லி விட்டு அவன் இரு கைகளையும் ஹேண்டில்பாரிலிருந்து எடுத்து விட,

  

பயத்தில் அலறினாள்.  “அடேய்...அடேய்...நீ தனியா வரும் போது இந்த சர்க்கஸ் வேலையெல்லாம் பண்ணுடான்!...இப்ப என்னைக் கொண்டு போய் பத்திரமா வீட்டுல சேர்த்து விடுடா”

  

அவள் அலறலைக் கண்டு சிரித்தவன், எடுத்த கைகளை மீண்டும் ஹேண்டில்பாரில் வைத்தான்.  “என்ன வசந்தி இப்படி பயப்படறே?....என்னையெல்லாம் விட்டா பைக் ரேஸிலேயே கலந்து ஜெயிப்பேன் தெரியுமா?”

  

“மொதல்ல பைக் வாங்கு...அப்புறமா ரேஸுக்குப் போறதைப் பற்றிப் பேசலாம்” என்றாள் வசந்தி அவன் முதுகில் குத்தி.

  

சிறிது தூரம் சென்றபின், வசந்தி, “அண்ணா...வண்டியை நிறுத்து!...வண்டியை நிறுத்து” கத்தினாள்.

  

“என்ன வசந்தி?..என்னாச்சு?” வேகத்தை மட்டுப் படுத்திக் கொண்டு கேட்டான்.

  

“அங்க பாரு”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.