(Reading time: 6 - 12 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

  

வள் கை நீட்டிய திசையில் பார்த்த முரளி லேசாய் அதிர்ச்சி வாங்கினான்.  அங்கே, யாரோ ஒரு மனிதன் குப்புறக் கிடந்தான்.

  

“ஆக்ஸிடெண்ட் போலிருக்கு...வாண்ணா போய்ப் பார்க்கலாம்” என்றாள் வசந்தி வண்டியிலிருந்து கீழே இறங்கியபடி.

  

தங்கை இறங்கியவுடன் தானும் இறங்கி, வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு, குப்புறக் கிடக்கும் அந்த மனிதனை நோக்கி நடந்தான்.

  

அருகில் சென்றதும் காற்றில் மது வாடை வீச, “அய்ய...வசந்தி இது ஆக்ஸிடெண்ட் கேஸ் அல்ல...தண்ணிக் கேஸ்!...எவனோ அளவுக்கதிகமா தண்ணியைப் போட்டுக்கிட்டுக் கிடக்கறான்” என்றான்.

  

ஆனால் வசந்தி குனிந்து அந்த மனிதனின் முகத்தை அடையாளம் பார்த்தாள்.

  

“வசந்தி...இது நாம் உதவி செய்யற விஷயமல்ல...கண்டுக்காம போற விஷயம்!...அதனால..கிளம்பு...போகலாம்” என்றான் முரளி.

  

ஆனால் அவளோ, “இல்லைண்ணா...இந்த ஆள் முகம் எங்கியோ பார்த்த மாதிரித் தெரியுது” என்றாள் குனிந்து நின்றவாறே.

  

அவளருகே வந்து நன்றாகக் குனிந்து பார்த்த முரளிக்கு அப்போதுதான் அடையாளம் தெரிந்தது. “அட...இவன்...சொக்கு!...மூணு மாசத்துக்கு முன்னாடி நம்ம தனசேகரனைக் குத்திட்டு ஜெயிலுக்குப் போனானே...அவன்!...சுயநினைவே இல்லாத அளவுக்குக் குடிச்சிட்டு...நடு ரோட்டுல கிடக்கறான்!”

  

“அதையே இப்படி மாற்றிச் சொல்லிப் பாரேன் முரளி” வசந்தி தலையைச் சாய்த்துக் கொண்டு சொல்ல,

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.