(Reading time: 6 - 12 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

“எப்படி?”

  

“அன்னிக்கு தனசேகர் உசுருக்குப் போராடிட்டு இருந்தப்ப...தன்னோட ரத்தத்தை அவனுக்குக் குடுத்து அவன் உயிரைக் காப்பாற்றியவன்!”ன்னு சொல்லிப் பாரு முரளி” என்றாள் வசந்தி.

  

“அட...ஆமாம்...இவன் மட்டும் அன்னிக்கு மறுத்திருந்தா...அந்த மல்லிகா இன்னிக்கு விதவையாய்த்தான் இருப்பா!” என்றான் முரளி.

  

“அண்ணா...எப்பவுமே ஒருத்தர் கிட்ட இருக்கற கெட்ட விஷயங்களை நாம ஜீரணம் பண்ணிக்கணும்!...நல்ல விஷயங்களை நாம அனுபவிக்கணும்!...ரசிக்கணும்!”

  

“சரி வசந்தி...இப்ப என்ன பண்ணலாம்!னு சொல்றே?” முரளி தங்கையையே கேட்டான்.

  

“ஒண்ணும் பண்ண வேண்டாம்...நம்ம வண்டிலேயே ட்ரிபிள்ஸ் அடிச்சு இவரை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவோம்!...நல்லா போதை தெளிஞ்சு சுய நினைவுக்கு வந்த பிறகு அவர் வீட்டுக்கு அனுப்புவோம்!...என்ன சொல்றே?”

  

“எப்படிம்மா....இவர் இப்ப இருக்கற நிலைமைல இவரை எப்படி...நம்ம வண்டில?”

  

“ஒண்ணும் பிரச்சினையில்லை!...எனக்கும் உனக்கும் நடுவுல உட்கார வை!...இதோ இந்த துப்பட்டாவை வெச்சு...அவரை உன் முதுகோடு சேர்த்துக் கட்டிக்கோ...நான் பின்னாடி உட்கார்ந்து கீழே விழாமல் பிடிச்சுக்கறேன்!...அவ்வளவுதான்!”

  

“சரிம்மா” என்ற முரளி அவள் சொன்னது போலவே செய்து, டி.வி.எஸ்-50-ஐ நிதானமாய்ச் செலுத்தி, பத்தே நிமிடத்தில் அந்த சொக்குவை தன் வீட்டுக் கூடத்திலிருந்த கயிற்றுக் கட்டிலில் படுக்க வைத்தான்.

  

“யாருடா இது?” கேட்டுக் கொண்டே வந்த முரளியின் தாய் ராக்கம்மா, அருகில் வந்து சொக்குவின் முகத்தைப் பார்த்ததும், “அடக் கருமமே...இவனையா தூக்கிட்டு வந்தீங்க?...உங்க ரெண்டு பேருக்கும் என்ன மூளை கெட்டுப் போச்சா?...இவன் ஒரு கொலைகார நாயி!ன்னு

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.