(Reading time: 5 - 9 minutes)
Inspector Then
Inspector Then

தொடர்கதை - இன்ஸ்பெக்டர் தேன் - 01 - தேன்மொழி

   

கேஸ் ஃபைல் - 01 - குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்...!

  

மூடுபனியினால் சூழ பட்டிருந்த மலைகளின் அழகை ரசித்தப் படி நடந்த தென்றல்வாணன், கேட்டை திறந்து வீட்டினுள் நுழைந்தான்.

  

"எவ்வளவு நேரம்ப்பா? இன்னைக்கும் டோஸ் காத்துட்டிருக்கு"

  

மகள் ஷாலினி கொடுத்த க்ளுவினால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ராஜேஷ்குமார் சொல்லும் 'ஞே' பாவனையுடன் சமையலறையினுள் நுழைந்தான் தேன் என்று நண்பர்களால் அழைக்கப் படும் தென்றல்வாணன்.

  

அவன் மனைவி சத்யப்ரியா காளி அவதாரத்தில் நின்றிருந்தாள்.

  

"டைம் என்ன ஆகுது?"

  

பற்களை கடித்த படி வார்த்தைகளை துப்பினாள் சத்யா.

  

"கொஞ்சொண்டு லேட் ஆச்சு சத்யா?" என மனைவியை சமாதானப் படுத்த முயன்றான் தேன்.

  

"ஏழு மணிக்கு மார்க்கெட் போயிட்டு பத்து மணிக்கு வரது உங்களுக்கு கொஞ்சம் லேட்டா?"

  

"ஏழு மணி இல்லைம்மா ஆறே முக்கால்!" என்றாள் ஷாலினி.

  

அப்பா, அம்மாவிடம் டோஸ் வாங்குவதை பார்த்து ரசித்தபடி, இன்னும் கொஞ்சம் பற்றி எரிய பெட்ரோல் ஊற்றிய மகளை ஓரக் கண்ணால் கோபமாக பார்த்த தேன், சத்யா முகத்தில் கடுப்பு அதிகமாவதை கவனித்து மீண்டும் பழைய முக பாவனைக்கு மாறினான்.

  

"எங்கே போயிருந்தீங்க? என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?"

  

"அது வந்து சத்யா..."

  

9 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.