காட்டேஜில் விக்ராந்திற்கும் கீர்த்திக்கும் நடுவில் சண்டையே வந்தது
”விக்ராந்த் ஏன் இப்படி என்னை வெறுக்கற, நான் உன்னை லவ் பண்ண கூடாதா”
”கூடாது நாம நட்பா பழகறோம், எங்க இருந்து இப்படியொரு எண்ணம் வந்தது உனக்கு சே எனக்கு கஷ்டமாயிருக்கு கீர்த்தி, நீயா இப்படி”
”இல்லை விக்ராந்த் நீன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்”
”பிடிக்கும் வேற லவ் வேற, ரெண்டையும் போட்டு குழப்பிக்காத என்னால உன்னை லவ் பண்ண முடியாது நீ என்னோட தோழி அவ்ளோதான்“
”ஆனா விக்ராந்த்“
”நீ இந்த எண்ணத்திலதான் இங்க வந்தேன்னா தயவு செஞ்சி கிளம்பிடு ப்ளீஸ்”
”விக்ராந்த் ப்ளீஸ்”
”ஐ அம் சாரி கீர்த்தி, என்னால உன்னை எப்பவுமே காதலிக்க முடியாது, நான் நட்பை மதிக்கறேன் அதனாலதான் உன்கிட்ட இவ்ளோ அமைதியா பேசறேன் இல்லைன்னா”
”விக்ராந்த் ப்ளீஸ்“
”நோ வே கீர்த்தி, முதல்ல உன் மனசை மாத்திக்க, என்னால உன்னை லவ் பண்ண முடியாது”
”நட்பை தாண்டி வேற எந்த காரணமும் இல்லையா உன்கிட்ட”
“ஓ இருக்கே நான் வேற ஒரு பொண்ணை விரும்பறேன்“
”விக்ராந்த் நீ என்ன சொல்ற இது உண்மையா”
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.