“கயல் இன்னைக்கு வியாழக் கிழமை, நீ நியூயார்க் போறீயா?”
முகத்தில் எந்த சலனத்தையும் காட்டாமல் கேள்விக் கேட்ட நித்தேஷைப் பார்த்தாள் கயல்விழி.
“ஆஹா, திரும்ப அதே டெரர் லுக் கொடுத்து பயமுறுத்துறீயே! நீ எப்படி போகப் போற, என்ன பிளான் வச்சிருக்கேன்னு எல்லாம் கேட்க மாட்டேன். டோன்ட் வொர்ரி. உனக்கு அடுத்து கதை சொல்ல என் கிட்ட கதை இப்போதைக்கு ஸ்டாக் இல்லை.”
கயல் உதட்டில் சின்ன புன்னகை தோன்றியது!
“இது பரவாயில்லை, கொஞ்சம் தைரியத்தை கொடுக்குது!” என்றான் நித்தேஷ்.
“அப்புறம் எதுக்கு நியூயார்க் பத்தி கேட்டீங்க?”
“அங்கே ரீச் ஆனதும் ஒரு சிம்பிள் டெக்ஸ்ட் அனுப்பு.”
“எதுக்கு அனுப்பனும்?”
“ஸ்பெஷல் ரீசன் கிடையாது. சும்மா ஒரு வெல்னஸ் ஷேர் செய்ற மாதிரி தான்!”
“அப்படி பார்த்தா நீங்களும் கூட வீட்டுக்கு போனதும் டெக்ஸ்ட் அனுப்பனுமே?”
“அதானே! நீ பதிலுக்கு பதில் சொல்லியே ஆகனுமே! அனுப்பலாம், நீ என் மேல அக்கறை வச்சிருக்கேன்னு சொல்லு, தினம் தினம் கிளம்பும் போதும், ஈவ்னிங் ரீச் ஆகும் போதும் உனக்கு டெக்ஸ்ட் அனுப்புறேன்.”
“இப்படி பர்மிஷன் கேட்டுட்டா, குட் மார்னிங், குட் நைட்ன்னு மெசேஜ் அனுப்பிட்டே இருக்கீங்க?”