“உனக்கு இப்போ வொர்க் பெர்மிட் இல்லையே, அது அமுதாக்கு தெரியுமா? நீ வேலை தேடுறேன்னு ஏதாவது சொன்னீயா என்ன?” என்று விசாரித்தான்!
அப்போது தான் மனோஜ் தவறாக புரிந்துக் கொண்டிருப்பது மஞ்சுவிற்கு புரிந்தது!
அமுதாவிடம் அவளுக்காக வேலை பற்றி சொல்கிறாள் என்று நினைக்கிறான்...
அதை மாற்ற,
“எனக்கு இல்லை... உங்களுக்காக சொல்றேன்... அமுதா கிட்டேயும் சொன்னேன்... அவ கட்டாயம் ஹெல்ப் செய்றேன்னு சொல்லி இருக்கா...” என்று சொல்லிக் கொண்டே மனோஜின் முகத்தைப் பார்த்தவள், அதிர்ந்து, பேச்சை அப்படியே நிறுத்தினாள்!
மனோஜின் கண்கள் கோபத்தின் காரணமாக செங்கணலாக மாறி இருந்தது...
“எனக்கு ரெகமென்ட் செய்ன்னு உன் கிட்ட நான் கேட்டேனா???” என்று அவன் கேட்டப் போது அதில் கோபம் மட்டுமில்லாமல் இன்னும் என்னென்னவோ கலந்து இருந்தது!
மஞ்சு இப்போதும் அதிர்ச்சியில் இருந்து வெளி வராமல் நின்றாள்!
“நீன்னு இல்லை, யார் சிபாரிசு செஞ்சும் நான் வேலை தேடிக்கனும்னு இல்லை!”
ஏதாவது சொல்ல வேண்டும் என்பதுப் புரிய, முயற்சி செய்து,
“அப்படி நான் நினைக்கலை மனோஜ்... அந்த இன்னொரு வேலை பத்தியும் நீங்க எதுவும் சொல்லலை...” என அவள் சொல்ல முயல,
“ஹேய்!!” என பற்களை கடித்துக் கொண்டு கோபத்துடன் சொன்ன மனோஜின் கை அதே சீற்றத்துடன் வேகமாக அவளை அறையும் எண்ணத்துடன் அவளின் அருகே வந்தது!