(Reading time: 8 - 16 minutes)
Inspector Then
Inspector Then

எதுவுமே தெரியாது சார். அவ தான்...

  

டேய்...

  

வினோதன் ஆக்ரோஷத்துடன் விக்னேஸ்வரின் முகத்தின் அருகே தன் முஷ்டியை கொண்டு சென்றான்.

  

அடிக்காதீங்க சார்என்று பயத்துடன் அலறினான் விக்னேஸ்வரன்.

  

அதே நேரம் சாத்தி இருந்த அந்த அறையின் கதவு திறந்து, விக்னேஸ்வரின் அப்பா உள்ளே வந்தார்.

  

சார், சார் அவனை அடிக்காதீங்க, ப்ளீஸ் சார்!

  

அவன் உண்மையை சொன்னால் ஏன் அடிக்க போறோம். திரும்ப திரும்ப பொய் சொல்றான்.

  

அவன் சொல்றது உண்மை தான். சார்

  

இங்கே பாருங்க, நாங்க இந்த வேலையில நிறைய வருஷமா இருக்கோம். உண்மை சொல்றவனையும் பொய் சொல்றவனையும் எங்களால ஈசியா கண்டு பிடிக்க முடியும். முதல்ல ரோகினி கேஸ்ல போலீஸ் சந்தேகப்பட்டது இவன் மேல தான். அதுக்கு அப்புறம் நீங்க ஏதோ செய்து கேசை திசை திருப்பி இருக்கீங்க!

  

விக்னேஸ்வரனின் அப்பா பாவமாக அவர்களை பார்த்தார்.

  

சார், எங்களை பார்த்தால் அவ்வளவு வசதியானவங்க போலவா இருக்கு? ஒரு சாதாரண மிடில் கிளாஸ் பேமிலி சார் நாங்க.

  

இங்கே பாருங்க, எங்களுக்கு வேண்டியது உண்மை. உங்க மகனை உண்மையை சொல்ல சொல்லுங்க. இந்த செண்டிமெண்ட் சீனெல்லாம் எங்களுக்கு வேண்டாம், என்றான் வினோதன் கோபமாக.

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.