(Reading time: 8 - 16 minutes)
Inspector Then
Inspector Then

  

என் மகன் உண்மையை சொல்லி பட்ட பாடு கொஞ்சமில்லை சார்!

  

பதில் சொல்ல முனைந்த விநோதனை தடுத்த தென்றல்வாணன்,

   

இங்கே பாருங்க சார், இந்த கேசுல இதுவரைக்கும் என்ன நடந்ததுன்னு மறந்துட்டு, எங்க கிட்ட உண்மையை மட்டும் சொல்லுங்க, என்றான்!

  

பெரியவர் தயக்கத்துடன் மகனை பார்த்து விட்டு பேச தொடங்கினார்.

  

ரோகினி இறந்த அன்னைக்கு போலீஸ் வந்து இவனை விசாரணைக்குன்னு ஸ்டேஷன் அழைச்சிட்டு போனாங்க... விக்னேஷ், ஷர்ட்டை கழட்டி காட்டுடா...

  

விக்னேஸ்வரன் தயக்கத்துடன் அணிந்திருந்த சட்டையை கழட்டினான்.

  

திரும்புடா!

  

அப்பாவின் பேச்சை கேட்டு அவன் முதுகு காட்டி திரும்பவும், அவன் முதுகில் இருந்த பல பல தழும்புகள் கண்ணில் பட்டது.

  

என் மகனை நான் கை நீட்டி அடிச்சதே இல்லை சார். இங்கே பார்த்தீங்களா, நீங்க கேட்ட உண்மையை சொன்னதுக்காக அவன் ஸ்டேஷன்ல வாங்கின அடிகளால் வந்த தழும்புகளை!

  

ஆனால்...

  

இவன் கிட்ட இவன் தான் அந்த பொண்ணை கொலை செய்ததா ஏத்துக்க சொல்லி அந்த இன்ஸ்பெக்டர் அடிச்சதால வந்தது தான் இது.

  

என்ன?”

  

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.