(Reading time: 8 - 16 minutes)
Inspector Then
Inspector Then

ஆமாம் சார்! விக்னேஷ் ரோஹினி என் பிரெண்ட் நான் அவக் கூட போன்ல மட்டும் தான் பேசினேன்னு உண்மையை சொன்னதை அந்த இன்ஸ்பெக்டர் ஏத்துக்கலை. இவங்க இரண்டு பேரும் முன்னாடியே பேசி வச்சிருந்ததாகவும், இவன் போன் செய்த உடனே அவள் வீட்டை விட்டு வெளியே வர, இவன் அவக் கிட்ட தப்பா நடக்க முயற்சி செய்ததில் அவ செத்து போனதாகவும் சொல்லி வாக்குமூலம் கொடுக்க சொல்லி அடி அடின்னு இவனை போட்டு அடிச்சார்.

  

அப்புறம் எப்படி கேஸ் மாறிச்சு?”

  

எங்களை போல மிடில் கிளாஸ் ஆளுங்க என்ன சார் செய்ய முடியும்? ஏதோ என்னோட நல்ல நேரம் என் க்ளோஸ் பிரென்ட் சென்னைல செக்ரடேரியட்ல சி.எம் செல்ல இருக்கான். அவன் கிட்ட விஷயத்தை சொல்லி கெஞ்சினேன். அவனோட ரெகமெண்டேஷன் கூடவே என் மகள் கல்யாணத்துக்காக வச்சிருந்த பத்து லட்சம் எல்லாம் கொடுத்தப்புறம் தான் இவனை விட்டார் அந்த இன்ஸ்பெக்டர். யார் எப்போ கேட்டாலும் அந்த பொண்ணு இவனை லவ் பண்ண சொல்லி தொல்லை செய்ததாக சொல்ல சொன்னார்.

  

ஆனாலும் எப்படி ஒரு பொண்ணை பத்தி தப்பா பேசுறதுக்கு ஒத்துக்கிட்டீங்க?”

  

சார், அந்த பொண்ணு செத்து போயிட்டா. நாங்க நாலு பேரும் உயிரோட இருக்கோமே! இவன் தான் சார் எங்களுக்கு இருக்க ஒரே நம்பிக்கை. இவன் படிச்சு முடிச்சாச்சு. இவனுக்கு ஒரு நல்ல வேலை இப்போ இருக்கு. இவன் தான் இனி என் மகளை கரை சேர்க்கனும். நாங்க வேற என்ன செய்றது சார்?”

  

வினோதனும் தேன்-னும் பார்த்துக் கொண்டார்கள்.

  

ஓகே, இப்போதைக்கு எங்களுக்கு வேண்டிய விபரம் கிடைச்சிருச்சு. இனிமேல் நீங்க யாருக்கும் பயப்பட தேவையில்லை. தைரியமா இருங்க. எங்க டிபார்ட்மென்ட் சேர்ந்த ஒருத்தரால உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு நாங்க மன்னிப்பு கேட்டுக்குறோம். அந்த இன்ஸ்பெக்டர் மேல அக்ஷன் எடுக்க முடியுமான்னு பார்க்கிறோம்.

  

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.