(Reading time: 8 - 16 minutes)
Inspector Then
Inspector Then

  

வெளியே நாம பார்த்தது உன்னோட அக்காவா விக்னேஷ்?”

  

தேனின் சம்மந்தமில்லாத கேள்விக்கான காரணம் புரியாமல் குழப்பத்துடனே,

  

ஆமாம் சார்என்று பதிலளித்தான் விக்னேஸ்வரன்.

  

உனக்கு ஒரு அக்கா இருக்கும் போது ஒரு பொண்ணை பத்தி தப்பா பேசினால் அது எப்படி இருக்கும்னு நான் சொல்லி தர வேண்டியதில்லை. உண்மையை மட்டும் பேசுவோமா?”

  

உண்மையை தான் சார் சொல்றேன். ரோஹினி தான் என்னை போன்ல கூப்பிட்டு கூப்பிட்டு தொல்லை செய்வா!

  

டேய்...என்று கோபத்துடன் சொல்லிக் கொண்டே எழுந்து தன் முஷ்டியை மடக்கி காட்டினான் வினோதன்.

  

அடிச்சேன்னு வை அவ்வளவு தான்! எங்களை பார்த்தால் உனக்கு எப்படி இருக்கு? அந்த பொண்ணோட போனுக்கு வந்த மொத்த கால் ரெகார்ட்ஸும் பதிவாகி இருக்கு. அவளுக்கு போன் மேல போன் போட்டு பேசினவன் நீ தான். கடைசியா அவ இறந்து போன அன்னைக்கு காலையில அவக் கிட்ட கடைசியா பேசினவனும் நீ தான். உண்மையை சொல்லு!

  

மென்று விழுங்கிய விக்னேஸ்வரன், பயத்துடன்,

  

அவள் எனக்கு மிஸ்ட் கால் கொடுப்பா, சார்என்றான்.

  

தேன், இவன் உண்மையை பேச மாட்டான் போல இருக்கே! டேய், அவ மிஸ்ட் கால் கொடுத்திருந்தாலும் ரெகார்ட்ஸ்ல இருக்கும்ல? நீ பொய் சொல்றதை பார்த்தால் எனக்கு சந்தேகமா இருக்கு!

  

சார், சார், அவ எனக்கு பிரெண்ட் தான் சார். சும்மா அவக் கூட பேசுவேன். எனக்கு வேற

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.