(Reading time: 8 - 16 minutes)
Inspector Then
Inspector Then

அக்ஷன் எல்லாம் வேண்டாம் சார். இந்த கேஸ் முடிஞ்சு, எங்களை ப்ரீயா விட்டீங்கனாலே போதும்.

  

சீக்கிரமே உண்மை தெரிய தான் போகுதுங்க!

  

****************

   

ஜீப் திரும்பி வந்த வழியே ஓடிக் கொண்டிருந்தது.

  

யாரோ குற்றவாளியை மறைக்க ரொம்ப பிரயத்தனப் படுறாங்க. ஏன்? அந்த பொண்ணோட உடம்பில இருந்த மற்றொரு காயத்திற்கான உண்மையான காரணம் என்ன? அதை பத்தின விபரங்கள், போடோஸ் எல்லாம் போலீஸ் பைல்ல இருந்து எப்படி காணாமல் போச்சு? என மனதில் இருந்த கேள்விகளை அடுக்கினான் தென்றல்வாணன்.

  

பணம் பாதாளம் வரைக்கும் பாயும், தேன்! என்றான் ஜீப் ஒட்டிக் கொண்டிருந்த வினோதன்.

  

“ம்ம்ம்... இருக்கலாம்! ஆனால் ஒரு விஷயம் தெளிவா புரியுது. இது சாதாரண தற்கொலை கேஸ் இல்லை...! அதுல சந்தேகமே கிடையாது. இனி டைரக்ட் அட்டாக் தான், வினோதன். நேரா அந்த செவ்வந்திபுரம் போய் அந்த பங்களாவை பார்ப்போம். அந்த கிணத்தையும் பார்ப்போம்.”

   

வினோதன் கடிகாரத்தில் மணி பார்த்து, மறுப்பாக தலையை ஆட்டினான்.

  

இன்னைக்கு போக முடியாது, தேன். செவ்வந்திபுரம் இன்னொரு கார்னர்ல இருக்கு. நாளைக்கு போவோம்.”

  

ஓகே, அப்போ வீட்டுக்கு போ, நான் அந்த பைல்ல இருக்க மத்த போடோஸை திரும்ப பார்க்கணும்!

  

வினோதன் தென்றல்வாணனின் வீட்டை நோக்கி ஜீப்பை செலுத்தினான்.

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.