மயங்கிப் போன ராமலிங்கதைக்கண்டு அனைவருமே பதறினார்கள். அபியோ
”அப்பா அப்பா“ என அவரிடம் அமர்ந்து அவரின் தோளை உலுக்க விக்ராந்த் அவசரமாக
”தண்ணீர் கொண்டு வா” என சொன்னதும் சோபியாதான் அவசரமாக தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்து தந்தாள், என்ன அதற்குள் அது அழுகிப் போகவும் சோபியா கலங்கிப் போனாள். விக்ராந்தோ ராகுலைப் பார்த்து
”டேய் ராகுல்” என கத்த ராகுல் அதுவரை பதட்டத்தில் அப்படியே என்ன செய்வதென தெரியாமல் விக்கித்து நின்றிருந்தான், விக்ராந்த் கத்தவும் இயல்புக்கு வந்தவன்
”சொல்டா”
”தண்ணி கொண்டாடா இவரோட மயக்கத்தை போக்கனும்” என சொல்ல ராகுல் உடனே தண்ணீர் கொண்டு வந்து தர அதை வைத்து விக்ராந்த் ராமலிங்கத்தின் முகத்தில் தெளித்தான்
”அங்கிள் அங்கிள்” என சொல்லிக் கொண்டே தண்ணீரை தெளித்தான், அதில் அவரின் மயக்கம் சற்று நீங்கியது, அதில் விக்ராந்த் நிம்மதியானான். அபியோ
”அப்பா அப்பா“ என பயத்தில் அவரை உலுக்கினாள்.
மெல்ல மெல்ல ராமலிங்கம் கண்கள் திறந்துப் பார்த்தார், தீடீரென ஏற்பட்ட அதிர்ச்சியில் அவருக்கு மயக்கம் வந்திருந்தது, இப்போது அவர் தன்னை இயல்பாக்கிக் கொள்ள முயன்றார் அபியோ
”அப்பா உங்களுக்கு ஒண்ணுமில்லைப்பா, நீங்க நல்லாயிருக்கீங்க அப்பா, என்னைப் பாருங்கப்பா அப்பா“ என அவரிடம் பதட்டமாக பேச விக்ராந்தோ
”அபி நீ பதட்டப்படாத, அங்கிள்க்கு ஒண்ணுமில்லை நீ அமைதியாயிரு” என சொல்ல அபியும் சற்று அமைதியாக ராகுலோ சங்கடப்பட்டான்
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.